O Lord of the Devas (Deivanāyaka)! My Soul is Yours.
தெய்வநாயகா! என் உயிர் உன்னுடையது
3308 ஆறெனக்குநின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் * உனக்கோர்கைம்
மாறுநானொன்றிலேன் எனதாவியும்உனதே *
சேறுகொள்கரும்பும்பெருஞ்செந்நெல்லும் மலிதண் சிரீவரமங்கை *
நாறுபூந்தண்துழாய்முடியாய்! தெய்வநாயகனே! (2)