Chapter 6

Mother's anger on seeing her daughter owned by the Lord - (கடல் ஞாலம்)

தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ஆவேசமோ என்று நொந்து கூறல்
Introduction & Details
Recitation
Translation

TVM 5.6.2

3289 கற்குங்கல்விக்கெல்லையிலனேயென்னும்

கற்குங்கல்வியாவேனும்யானேயென்னும் *

கற்குங்கல்விசெய்வேனும்யானேயென்னும்

கற்குங்கல்விதீர்ப்பேனும்யானேயென்னும் *

கற்குங்கல்விச்சாரமும்யானேயென்னும்

கற்குங்கல்விநாதன்வந்தேறக்கொலோ? *

கற்குங்கல்வியீர்க்கிவையென்சொல்லுகேன்?

கற்குங்கல்விஎன்மகள்காண்கின்றனவே.

TVM 5.6.3

3290 காண்கின்றநிலமெல்லாம்யானேயென்னும்

காண்கின்றவிசும்பெல்லாம்யானேயென்னும் *

காண்கின்றவெந்தீயெல்லாம்யானேயென்னும்

காண்கின்றஇக்காற்றெல்லாம்யானேயென்னும் *

காண்கின்றகடலெல்லாம்யானேயென்னும்

காண்கின்றகடல்வண்ணனேறக்கொலோ?

காண்கின்றவுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?

காண்கின்றஎன்காரிகைசெய்கின்றவே.

TVM 5.6.7

3294 உற்றார்களெனக்கில்லையாருமென்னும்

உற்றார்களெனக்கிங்கெல்லாருமென்னும் *

உற்றார்களைச்செய்வேனும்யானேயென்னும்

உற்றார்களையழிப்பேனும்யானேயென்னும் *

உற்றார்களுக்குற்றேனும்யானேயென்னும்

உற்றாரிலிமாயன்வந்தேறக்கொலோ? *

உற்றீர்கட்கென்சொல்லிச்சொல்லுகேன்யான்

உற்றுஎன்னுடைப்பேதையுரைக்கின்றவே.