Has the Ocean-hued Lord Possessed Her?
கடல் வண்ணன் இவள்மீது ஆவேசித்துவிட்டானோ?
3290 காண்கின்றநிலமெல்லாம்யானேயென்னும்
காண்கின்றவிசும்பெல்லாம்யானேயென்னும் *
காண்கின்றவெந்தீயெல்லாம்யானேயென்னும்
காண்கின்றஇக்காற்றெல்லாம்யானேயென்னும் *
காண்கின்றகடலெல்லாம்யானேயென்னும்
காண்கின்றகடல்வண்ணனேறக்கொலோ?
காண்கின்றவுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?
காண்கின்றஎன்காரிகைசெய்கின்றவே.