She Speaks of Kaṇṇaṉ's Qualities as Her Own!
கண்ணன் தன்மைகளைத் தன் தன்மைகளாகக் கூறுகின்றாளே!
3291 செய்கின்றகிதியெல்லாம்யானேயென்னும்
செய்வானின்றனகளும்யானேயென்னும் *
செய்துமுன்னிறந்தனவும்யானேயென்னும்
செய்கைப்பயனுண்பேனும்யானேயென்னும் *
செய்வார்களைச்செய்வேனும்யானேயென்னும்
செய்யகமலக்கண்ணனேறக் கொலோ?
செய்யவுலகத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
செய்யகனிவாயிளமான்திறத்தே.