TVM 5.6.7

Has the Wondrous Lord Possessed Her?

மாயன் இவள்மீது ஆவேசித்தானோ?

3294 உற்றார்களெனக்கில்லையாருமென்னும்

உற்றார்களெனக்கிங்கெல்லாருமென்னும் *

உற்றார்களைச்செய்வேனும்யானேயென்னும்

உற்றார்களையழிப்பேனும்யானேயென்னும் *

உற்றார்களுக்குற்றேனும்யானேயென்னும்

உற்றாரிலிமாயன்வந்தேறக்கொலோ? *

உற்றீர்கட்கென்சொல்லிச்சொல்லுகேன்யான்

உற்றுஎன்னுடைப்பேதையுரைக்கின்றவே.

Text size