Has My Daughter Become Divinely Possessed?
என் மகளுக்கு ஆவேசம் வந்துவிட்டதோ?
3288 கடல்ஞாலம்செய்தேனும்யானேயென்னும்
கடல்ஞாலமாவேனும்யானேயென்னும் *
கடல்ஞாலம்கொண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலம்கீண்டேனும்யானேயென்னும் *
கடல்ஞாலமுண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலத்தீசன்வந்தேறக்கொலோ? *
கடல்ஞாலத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
கடல்ஞாலத்துஎன்மகள்கற்கின்றவே. (2)