Chapter 7

Āzhvār acclaims the extent of the Lord’s affection for him - (செஞ்சொல் கவிகாள்)

எம்பெருமான் தம்மிடத்தில் வைத்திருந்த பெரும்பற்றை ஆழ்வார் பாராட்டுதல் (திருமாலிருஞ்சோலை)
When one desires a flower for its fragrance, one wears not just the flower but its stem/root as well. Similarly, emperumān doesn’t let go of the fragrance of knowledge that emanates from a sage’s body either. Since Bhagavān is a ‘bhakthi sabalan’ (meaning One whose resoluteness wavers when faced with ardent devotion), He wanted to take Āzhvār to paramapadam, + Read more
மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர். அதுபோல் ஞானியரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.
அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.
Verses: 3849 to 3859
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: the feelings of their senses and mind will be removed
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.7.1

3849 செங்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்மின் திருமாலிருஞ்சோலை *
வஞ்சக்கள்வன்மாமாயன் மாயக்கவியாய்வந்து * என்
நெஞ்சுமுயிருமுள்கலந்து நின்றாரறியாவண்ணம் * என்
நெஞ்சுமுயிருமவையுண்டு தானேயாகிநிறைந்தானே. (2)
3849 ## செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் * திருமாலிருஞ்சோலை *
வஞ்சக் கள்வன் மா மாயன் * மாயக் கவியாய் வந்து ** என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து * நின்றார் அறியாவண்ணம் * என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு * தானே ஆகி நிறைந்தானே (1)
3849 ## cĕñcŏl kavikāl̤ uyir kāttu āṭcĕymmiṉ * tirumāliruñcolai *
vañcak kal̤vaṉ mā māyaṉ * māyak kaviyāy vantu ** ĕṉ
nĕñcum uyirum ul̤ kalantu * niṉṟār aṟiyāvaṇṇam * ĕṉ
nĕñcum uyirum avai uṇṭu * tāṉe āki niṟaintāṉe (1)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Beware, poets, as you weave your sweet and chaste songs, for attention is key lest you falter. The Lord of Tirumāliruñcōlai is mysterious, adept in deception and stealth. He seemingly grasped onto me to sing these songs, yet clandestinely dissolved into my heart and soul, consuming them entirely. Thus displacing me, He attained His complete stature.

Explanatory Notes

(i) Poets, sweet and chaste: Poets composing songs in elegant diction, abounding in choice words, pregnant with meaning, are said to be sweet and if they also happen to be selfless singers of the Lord’s glory, they are chaste indeed. This combined appellation would, however, cover only a few poets of the eminence of the first three Āzhvārs (Poikai, Pēy and Pūtattāḻvār). + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செஞ்சொல் செவ்விய சொற்களை உடைய; கவிகாள்! கவிகளே!; உயிர் உங்கள் உயிரை; காத்து காத்துக் கொண்டு; ஆட்செய்மின் கவி பாடுங்கள்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; மலையில் இருப்பவன் மலையில் இருப்பவன்; வஞ்சக் கள்வன் வஞ்சனையும் களவும்; மா மாயன் மாயமுமே வடிவெடுத்த பெருமான்; மாயக் கவியாய் மாயக் கவியாய்; வந்து என் வந்து என்; நெஞ்சும் உயிரும் உள் நெஞ்சுள்ளும் உயிருள்ளும்; கலந்து நின்றார் கலந்து நின்றார்; அறியா வண்ணம் திருமகளும் அறியாதபடி; அவை என் நெஞ்சும் அந்த என் நெஞ்சையும்; உயிரும் உண்டு உயிரையும் விழுங்கி; தானே ஆகி தானே ஆகி பெரும் பேறு பெற்றவனாக; நிறைந்தானே நிறைந்து விட்டான்
mā māyan one who has very amaśing form, qualities etc (to attract others); māyak kaviyāy one who remains with mischievous acts to make me sing poems; vandhu arriving at (where we are, with determination); en nenjul̤l̤um in my heart; uyir ul̤l̤um in self; kalandhu mixing seamlessly; ninṛār even lakshmi et al who remain with him; aṛiyā vaṇṇam without the knowledge; avai those; nenjum my heart; uyirum self [āthmā]; uṇdu consumed; thānĕ āgi becoming the exclusive enjoyer; niṛaindhān became avāptha samastha kāma (one who has no unfulfilled desire);; sem having honesty (without any expectation); sol with words; kavigāl̤ ŏh all of you who can sing poems!; uyir kāththu protecting (from his hand, your) selves and belongings from being stolen; ātcheymmin try to serve with your [faculty of] speech.; ennai me; muṝum in all ways

TVM 10.7.2

3850 தானேயாகிநிறைந்து எல்லாவுலகுமுயிரும்தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானேதுதித்து * எனக்குத்
தேனேபாலேகன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகிநின்றொழிந்தான் என்னைமுற்று முயிருண்டே.
3850 தானே ஆகி நிறைந்து * எல்லா உலகும் உயிரும் தானே ஆய் *
தானே யான் என்பான் ஆகித் * தன்னைத் தானே துதித்து ** எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே * திருமாலிருஞ்சோலை *
கோனே ஆகி நின்றொழிந்தான் * என்னை முற்றும் உயிர் உண்டே (2)
3850 tāṉe āki niṟaintu * ĕllā ulakum uyirum tāṉe āy *
tāṉe yāṉ ĕṉpāṉ ākit * taṉṉait tāṉe tutittu ** ĕṉakkut
teṉe pāle kaṉṉale amute * tirumāliruñcolai *
koṉe āki niṉṟŏzhintāṉ * ĕṉṉai muṟṟum uyir uṇṭe (2)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord has completely consumed me, and now He himself has become complete within me. The essence of all worlds and beings now stands transformed into myself. He praises Himself through me, and His presence is as sweet to me as candy, nectar, milk, and honey. He is now the Lord of Tirumāliruñcōlai within me.

Explanatory Notes

(i) The Āzhvār finds that the Lord, Who mingled with him, completely displaced him and spread Himself out, in full, over the entire body of the Āzhvār; nay, He attained perfection and His sovereign stature only after this event. He could become God indeed only after the songs of His glory flowed from the sweet lips of the Āzhvār. It can be recalled that it is the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை முற்றும் என்னை முற்றும்; உயிர் உண்டே அநுபவித்து; தானேஆகி தானே ஆகி; நிறைந்து நிறைவு பெற்றான்; எல்லா உலகும் உயிரும் எல்லா உலகும் உயிரும்; தானே ஆய் அனைத்துக்கும் அந்தராத்மாவாய்; யான் என்பான் நான் என்கிற வஸ்துவும்; தானே ஆகி தானேயாய்; தன்னைத் தானே தன்னைத் தானே துதித்து; துதித்து நான் துதித்ததாக வெளியிட்டான்; எனக்கு தேனே பாலே எனக்கு தேனே பாலே; கன்னலே கன்னலே; அமுதே அமுதே என்று ஸகலவித போக்யமும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; மலையில் இருப்பவன் மலையில் இருப்பவன்; கோனே ஆகி ஸ்வாமியான தானேயாய்; நின்றொழிந்தான் நின்றான்
uyir uṇdu enjoying the self; thānĕ āgi being the primary one; niṛaindhu being complete; ellā ulagum all worlds; uyirum the creatures which are present in those worlds; thānĕ āy to be himself (being the controller, by being the antharāthmā (indwelling super soul), and not just that common principle); yān enbān being ī, the entity which is explained by the presence of consciousness; thānĕ āgi to be himself (due to that inseparable nature); thannai on him, who is praised; thānĕ thudhiththu being the one who praises and praising him; enakku due to revealing to me; thĕnĕ pālĕ kannalĕ amudhĕ being honey, milk, sugar and nectar and all the taste in these objects; thirumālirunjŏlai mercifully residing in thirumālirunjŏlai; kŏnĕ āgi being the lord, himself; ninṛozhindhān remained here without leaving; ennai me; muṝum in all ways

TVM 10.7.3

3851 என்னைமுற்றுமுயிருண்டு என்மாயவாக்கையிதனுள்புக்கு *
என்னைமுற்றும்தானேயாய் நின்றமாயஅம்மான்சேர் *
தென்னன்திருமாலிருஞ்சோலைத் திசைகைகூப்பிச் சேர்ந்தயான் *
இன்னும்போவேனேகொலோ? எங்கொலம்மான் திருவருளே?
3851 என்னை முற்றும் உயிர் உண்டு * என் மாய ஆக்கை இதனுள் புக்கு *
என்னை முற்றும் தானே ஆய் * நின்ற மாய அம்மான் சேர் **
தென் நன் திருமாலிருஞ்சோலைத் * திசை கைகூப்பிச் சேர்ந்த யான் *
இன்னும் போவேனேகொலோ? * என்கொல் அம்மான் திரு அருளே? (3)
3851 ĕṉṉai muṟṟum uyir uṇṭu * ĕṉ māya ākkai itaṉul̤ pukku *
ĕṉṉai muṟṟum tāṉe āy * niṉṟa māya ammāṉ cer **
tĕṉ naṉ tirumāliruñcolait * ticai kaikūppic cernta yāṉ *
iṉṉum poveṉekŏlo? * ĕṉkŏl ammāṉ tiru arul̤e? (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The divine Lord of Tirumaliruñcōlai who faces the south, has completely absorbed my life essence, entering my physical form and transforming me entirely. Now, I stand dedicated to Him, offering reverence with folded hands. As His devoted servant, I contemplate His profound grace, wondering if I can ever leave His presence for elsewhere. His grace is truly limitless and incomparable.

Explanatory Notes

(i) The Āzhvār re-iterates that the Lord consumed him, in full, heart and Soul, deeming it a matter of great privilege and supreme joy, as if He had attained something unattainable. Nampiḷḷai has it that the Lord’s greatness and grandeur got heightened by His contact with the Āzhvār, even as His excellence shot up, while in conjunction with Goddess Mahālakṣmī, c.f. “Yasya + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை முற்றும் என்னை முழுதும்; உயிர் உண்டு அநுபவித்து விழுங்கி; என் மாய என்னுடைய ப்ராக்ருத; ஆக்கை இதனுள் சரீரத்தினுள்ளும்; புக்கு புகுந்து; என்னை முற்றும் என்னை முற்றும்; தானே ஆய் நின்ற தானே ஆய் நின்ற; மாய அம்மான் சேர் மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற; தென் நன் தென் திசையிலிருக்கும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; திசை கை கூப்பி திக்கை நோக்கி கை கூப்பி; சேர்ந்த யான் அடிமையான நான்; இன்னும் இனி வேறிடம்; போவேனேகொலோ போகமாட்டேன்; அம்மான் திரு அருளே எம்பெருமானின் அருளை விட; என்கொல்? வேறு ஒன்று உண்டோ?
uyir uṇdu enjoying my āthmā; en my; māyam being the cause for ignorance etc; ākkai idhanul̤ in this body (which is a product of prakruthi (matter), which is having defects which areperceivable by senses and which binds); pukku entered; ennai me (who is the controlling āthmā for this body); muṝum on body etc which are connected; thānĕ āy being the controller (to eliminate the ahanthā (ego) and mamathā (possessiveness)); ninṛa one who stood (as kruthakruthya (one who accomplished the duties)); māyam one who has amaśing qualities and acts; ammān one who is the unconditional lord; sĕr the abode where he firmly resides; then for the southern direction; nan praiseworthy; thirumālirunjŏlai standing on thirumalai (divine hill) which is known as thirumālirunjŏlai; thisai towards the direction; kai kūppi performing an act of servitude; sĕrndha yān ī who reached; innam after acquiring the state (of worshipping that direction too); pŏvĕnĕkolŏ will ī go anywhere else thinking that there is a destination for me?; ammān the unconditional lord-s; thiruvarul̤ affection; enkol how [amaśing] is it?; ulagum all the worlds; uyirum all the creatures

TVM 10.7.4

3852 என்கொல்அம்மான்திருவருள்கள்? உலகுமுயிரும் தானேயாய் *
நன்கென்னுடலம்கைவிடான் ஞாலத்தூடேநடந்துழக்கி *
தென்கொள்திசைக்குத்திலதமாய்நின்ற திருமாலிருஞ்சோலை *
நங்கள்குன்றம்கைவிடான் நண்ணாஅசுரர்நலியவே.
3852 என்கொல் அம்மான் திரு அருள்கள் * உலகும் உயிரும் தானே ஆய் *
நன்கு என் உடலம் கைவிடான் * ஞாலத்தூடே நடந்து உழக்கி **
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற * திருமாலிருஞ்சோலை *
நங்கள் குன்றம் கைவிடான் * நண்ணா அசுரர் நலியவே? (4)
3852 ĕṉkŏl ammāṉ tiru arul̤kal̤ * ulakum uyirum tāṉe āy *
naṉku ĕṉ uṭalam kaiviṭāṉ * ñālattūṭe naṭantu uzhakki **
tĕṉ kŏl̤ ticaikkut tilatamāy niṉṟa * tirumāliruñcolai *
naṅkal̤ kuṉṟam kaiviṭāṉ * naṇṇā acurar naliyave? (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

What a remarkable display of grace from my Lord! He clings lovingly to my body and to the sacred Mount Tirumāliruñ Cōlai, the pride of the South. As the Supreme Soul of all beings and things, He traversed the entire Earth to vanquish the impious Asuras.

Explanatory Notes

(i) The text of the song, in original, refers to the Lord’s peregrination on Earth but the inner meaning thereof seems to be that, under the pretext of spanning the entire universe as Trivikrama, the Lord was actually in search of a favourite spot where He could hold uninterrupted rapport with the Āzhvār and enjoy him to His heart’s fill. Tirumāliruñcōlai was the beauty + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகும் உலகுக்கும்; உயிரும் உயிரினங்களுக்கும்; தானே ஆய் அந்தர்யாமியாகவும்; நண்ணா தன்னைப் பணியாத; அசுரர் அசுரர்கள்; நலியவே அழியும்படியாகவும்; ஞாலத்து உலகெங்கும்; ஊடே நடந்து உழக்கி நடமாடி உலாவும் ஸ்வாமியை; தென் கொள் திசைக்கு தென் திசைக்கு; திலதமாய் நின்ற திலதமாய் இருக்கும்; நங்கள் குன்றம் நம் குன்றமாகிய; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை மலை; கைவிடான் பெருமானைக் கைவிடேன்; நன்கு என் உடலம் நான் அவனைக் கைவிடாதது போல்; கை விடான் அவனும் என்னை விட்டு நீங்காது இருக்கிறான்; திரு அருள்கள் அவனுடைய திருவருள் தான் என்னே!; என்கொல் அம்மான் எம்பெருமானின் அருள் தான் என்னே!
thānĕ āy to be himself (being antharāthmā, by pervading everywhere); naṇṇā not interested (in surrendering unto him); asurar demoniac persons; naliya to be destroyed; gyālaththūdĕ in the earth; nadandhu uzhakki walked around, stepping on it; then south; kol̤ having; thisaikku for the direction; thiladhamāy ninṛa one which is held on the head; thirumālirunjŏlai having the name thirumālirunjŏlai; nangal̤ enjoyable for those who are like us; kunṛam divine hill; kaividān not abandoning (considering it to be a favourable abode to acquire me);; en udalam my body; nangu very much; kai vidān not abandoning;; ammān lord-s; thiruvarul̤gal̤ the acts of ṣeelam (simplicity) which favour us; enkol how [amaśing] are they?; naṇṇā those who remain as obstacle, not desiring to acquire (bhagavath vishayam); asurar demoniac persons

TVM 10.7.5

3853 நண்ணாவசுரர்நலிவெய்த நல்லவமரர்பொலிவெய்த *
எண்ணாதனகளெண்ணும் நன்முனிவரின்பம்தலைசிறப்ப *
பண்ணார்பாடலின்கவிகள் யானாய்த்தன்னைத்தான்பாடி *
தென்னாவென்னும்என்னம்மான் திருமாலிருஞ் சோலையானே.
3853 நண்ணா அசுரர் நலிவு எய்த * நல்ல அமரர் பொலிவு எய்த *
எண்ணாதனகள் எண்ணும் * நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப **
பண் ஆர் பாடல் இன் கவிகள் * யானாய்த் தன்னைத் தான் பாடி *
தென்னா என்னும் என் அம்மான் * திருமாலிருஞ்சோலையானே (5)
3853 naṇṇā acurar nalivu ĕyta * nalla amarar pŏlivu ĕyta *
ĕṇṇātaṉakal̤ ĕṇṇum * nal muṉivar iṉpam talaiciṟappa **
paṇ ār pāṭal iṉ kavikal̤ * yāṉāyt taṉṉait tāṉ pāṭi *
tĕṉṉā ĕṉṉum ĕṉ ammāṉ * tirumāliruñcolaiyāṉe (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, who dissolved into me and sang sweet, pure songs, which sealed the fate of hostile demons and brought joy to the friendly Devas, as well as delighted the meditative sages who wish for the ever-expanding glory of His auspicious attributes, resides in Tirumāliruñcōlai.

Explanatory Notes

(i) “What a great connoisseur and how deeply interested!” exclaims the Āzhvār, when he sees the Lord who mingled with him and made him sing this great hymnal of Tiruvāymoḻi, humming with joy, as He listened to these songs.

(ii) The friendly Devas flourish while the Asuras, hostile and ungodly, perish, as a result of the Lord‘s incarnations. The same results are achieved + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நண்ணா பிரதி கூலர்களான; அசுரர் அஸூரர்கள்; நலிவு எய்த அழியவும்; நல்ல அமரர் அநுகூலர்களான; பொலிவு எய்த தேவர்கள் மகிழவும்; எண்ணாதனகள் மற்றவர்கள் எண்ணாதவற்றை; எண்ணும் ஞான நிறைவுடன் சிந்திக்கும்; நல் முனிவர் நல்ல முனிவர்கள்; இன்பம் தலை சிறப்ப கேட்டு மகிழும்படி; பண் ஆர் பாடல் இனிய பண்ணில் இசையில்; இன் கவிகள் இனிய கவிதைகளை; யானாய் தன்னை தானே யானாகித் தன்னை; தான் பாடி தானே பாடிக்கொண்டான்; தென்னா தென்னா தெனா; என்னும் என்று பாடும்படி என்னை ஆக்கிய; திருமாலிருஞ்சோலையானே திருமாலிருஞ்சோலை மலையில் இருக்கும்; என் அம்மான் எம்பெருமானின் அருள் தான் என்னே!
nalivu eydha to be destroyed (unable to bear this greatness); nalla amarar the divine persons, who have devotion and are favourable; polivu eydha to acquire opulence; eṇṇādhanagal̤ greatness which were never thought about previously over and above the qualities and wealth of emperumān who is avāptha samastha kāman (one who has no unfulfilled desires); eṇṇum those who desire due to love [towards him]; nal those who are with devotion; munivar meditators (who meditate and enjoy); inbam thalai siṛappa being deeply joyful; paṇ ār filled with tune; pādal having music; in kavigal̤ sweet poems; yānāy being ī (who am his prakāra (attribute)); thannai him (who is praiseworthy and who likes to be praised); thān pādi being the one who praise, and sang; thirumālirunjŏlaiyān standing as the lord of thirumālirunjŏlai; en ammān my lord; thennā ennum swaying his head, will sing.; sivanum rudhran (who is very knowledgeable); piramanum and brahmā

TVM 10.7.6

3854 திருமாலிருஞ்சோலையானேயாகிச் செழுமூவுலகும் * தன்
ஒருமாவயிற்றினுள்ளேவைத்து ஊழியூழிதலையளிக்கும் *
திருமாலென்னையாளுமால் சிவனும்பிரமனும்காணாது *
அருமாலெய்தியடிபரவ அருளையீந்தவம்மானே.
3854 திருமாலிருஞ்சோலையானே ஆகிச் * செழு மூவுலகும் * தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து * ஊழி ஊழி தலையளிக்கும் **
திருமால் என்னை ஆளும் மால் * சிவனும் பிரமனும் காணாது *
அரு மால் எய்தி அடி பரவ * அருளை ஈந்த அம்மானே (6)
3854 tirumāliruñcolaiyāṉe ākic * cĕzhu mūvulakum * taṉ
ŏru mā vayiṟṟiṉ ul̤l̤e vaittu * ūzhi ūzhi talaiyal̤ikkum **
tirumāl ĕṉṉai āl̤um māl * civaṉum piramaṉum kāṇātu *
aru māl ĕyti aṭi parava * arul̤ai īnta ammāṉe (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord, whom even Civaṉ and Piramaṉ couldn’t attain, bestowed His grace upon them when they intensely adored His lovely feet. He uniquely sustained the three bright worlds in His stomach at the end of each epoch and delivered them. Now, Tirumāl stands in Tirumāliruñcōlai, eager to enlist me as His vassal, showering upon me His supreme love.

Explanatory Notes

(i) The Lord, who sustained inside His little stomach all the worlds during the deluge, now wants to sustain Himself by clinging to the Āzhvār of whom He is passionately enamoured.

(ii) The Lord, who is well beyond the reach of even the exalted Śiva and Brahmā, is now after the Āzhvār and it is only to get at him that He has come down to Tirumāliruñcōlai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிவனும் பிரமனும் சிவனாலும் பிரமனாலும்; காணாது காணப் பெறாமல் இருப்பவனை; அரு மால் எய்தி பக்தியுடன் அந்த பெருமானின்; அடி பரவ திருவடிகளைத் துதிக்க அவர்களுக்கு; அருளை தன் கிருபையாலே அருளை; ஈந்த தந்தருளின; அம்மானே எம்பெருமானும்; செழு மூவுலகும் வளமான மூவுலங்களையும்; தன் ஒரு மா ஒப்பற்ற பெரிய தன்; வயிற்றினுள்ளே வைத்து வயிற்றினுள்ளே வைத்து; ஊழி ஊழி காலம் காலமாக; தலையளிக்கும் காப்பாற்றுபவனான; திருமால் திருமகளின் நாதனுமான எம்பெருமான்; திருமாலிருஞ்சோலையானே திருமாலிருஞ்சோலையில் இருப்பவன்; ஆகி நின்று என்னை ஆளும் மால் ஆகி என்னை ஆட்கொண்டான்
kāṇādhu being unable to see; aru difficult to attain; māl very great devotion; eydhi being the one who is having; adi divine feet; parava to praise; arul̤ai īndha one who fulfilled the desire with his (endless) grace; ammān being sarvādhika (greater than all); sezhu distinguished; mū ulagum three worlds; than one who can unite contrary aspects, his; oru unique; has skillful ability (to hide them from others- vision); vayiṝin ul̤l̤ĕ in the divine stomach, in a particular way; vaiththu placing; ūzhi ūzhi every kalpam; thalai primarily; al̤ikkum one who protects; thirumāl one who is having ṣriya:pathithvam (being the lord of ṣrī mahālakshmi, which is the cause for such ṣĕshithvam and rakshakthvam); thirumālirunjŏlaiyānĕ āgi having his presence in thirumālirunjŏlai; ennai me; āl̤um to accept my service; māl is very infatuated.; en ammānĕ ŏh my lord!; arul̤ai ī mercifully grant (your) mercy;

TVM 10.7.7

3855 அருளையீயென்னம்மானே! என்னும்முக்கணம்மானும் *
தெருள்கொள்பிரமனம்மானும் தேவர்கோனும்தேவரும் *
இருள்கள்கடியும்முனிவரும் ஏத்துமம்மான்திருமலை *
மருள்கள்கடியும்மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே.
3855 அருளை ஈ என் அம்மானே! என்னும் * முக்கண் அம்மானும் *
தெருள் கொள் பிரமன் அம்மானும் * தேவர் கோனும் தேவரும் **
இருள்கள் கடியும் முனிவரும் * ஏத்தும் அம்மான் திருமலை *
மருள்கள் கடியும் மணிமலை * திருமாலிருஞ்சோலை மலையே (7)
3855 arul̤ai ī ĕṉ ammāṉe! ĕṉṉum * mukkaṇ ammāṉum *
tĕrul̤ kŏl̤ piramaṉ ammāṉum * tevar koṉum tevarum **
irul̤kal̤ kaṭiyum muṉivarum * ettum ammāṉ tirumalai *
marul̤kal̤ kaṭiyum maṇimalai * tirumāliruñcolai malaiye (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Tirumāliruñcōlai, the beautiful mountain that dispels all ignorance, is where our Lord resides, adored with deep reverence by the triple-eyed Sire, Piramaṉ, renowned for his clear intelligence, as well as by the Devas, their Chief, and the sages who avoid ignorance.

Explanatory Notes

Seeing that Tirumāliruñcōlai is the place from where all that felicity, currently enjoyed by him, flows, the Āzhvār now adores that mountain itself, as the one that dispels ignorance and all other kindred impediments which stand between us and our destined goal. What more? It is the place coveted by the Lord who is adored by the exalted Devas, Śiva and Brahmā and enlightened sages, with deep devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் அம்மானே! என் ஸ்வாமியே! உன்; அருளை ஈ அருளைக் கொடுத்தருள வேண்டும்; என்னும் முக்கண் என்று பிரார்த்திக்கும் சிவபிரானும்; தெருள் கொள் நல்லறிவு வாய்ந்த; பிரமன் அம்மானும் நான்முகக் கடவுளும்; தேவர் கோனும் தேவேந்திரனும்; தேவரும் முப்பத்து மூவரமரர்களும்; இருள்கள் கடியும் அஞ்ஞானங்களைப் போக்க வல்ல; முனிவரும் முனிவர்களும்; ஏத்தும் துதிக்கும் படியாக; அம்மான் எம்பெருமான் இருக்கும் இடமான; திருமலை திருமாலிருஞ்சோலைமலை; மருள்கள் கடியும் அஞ்ஞான இருளை நீக்கும்; மணி மலை அழகிய மலையான; திருமாலிருஞ்சோலைமலையே திருமாலிருஞ்சோலைமலையே
ennum saying this; mukkaṇ ammānum the three-eyed rudhra (who thinks of himself as īṣvara); therul̤ kol̤ one who has qualities such as gyānam etc (which helps his being the creator etc); piraman ammānum brahmā who is the lord of the universe, by being the creator; dhĕvarkŏnum indhra who is the controller of dhĕvas; dhĕvarum dhĕvas (in the count of thirty three distinguished dhĕvathas and crores of other dhĕvas); irul̤gal̤ darkness (such as gyāna abhāvam (lack of knowledge), anyathā gyānam (understanding an object to be something else) and viparītha gyānam (understanding the object’s attributes incorrectly) etc on svarūpa (true nature) and purushārtha (goal)); kadiyum those who can eliminate through the instructions in the form of purāṇa etc; munivarum great sages; ĕththum to praise; ammān lord-s divine abode; thirumalai thirumalai [divine mountain]; marul̤gal̤ confusions such as avidhyā (ignorance) etc which are hurdles for the goal; kadiyum which can eliminate; maṇi distinguished, to be ultimately enjoyable; malai hill; thirumālirunjŏlai having the name, thirumālirunjŏlai; malaiyĕ the divine hill only.; thirumālirunjŏlai malaiyĕ thirumālirunjŏlai hill; thiruppāṛkadalĕ thiruppāṛkadal (divine milky ocean)

TVM 10.7.8

3856 திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற்கடலே என்தலையே *
திருமால்வைகுந்தமே தண்திருவேங்கடமேஎனதுடலே *
அருமாமாயத்தெனதுயிரே மனமேவாக்கேகருமமே *
ஒருமாநொடியும்பிரியான் என்ஊழிமுதல்வனொருவனே. (2)
3856 திருமாலிருஞ்சோலை மலையே * திருப்பாற்கடலே என் தலையே *
திருமால் வைகுந்தமே * தண் திருவேங்கடமே எனது உடலே **
அரு மா மாயத்து எனது உயிரே * மனமே வாக்கே கருமமே *
ஒரு மா நொடியும் பிரியான் * என் ஊழி முதல்வன் ஒருவனே (8)
3856 tirumāliruñcolai malaiye * tiruppāṟkaṭale ĕṉ talaiye *
tirumāl vaikuntame * taṇ tiruveṅkaṭame ĕṉatu uṭale **
aru mā māyattu ĕṉatu uyire * maṉame vākke karumame *
ŏru mā nŏṭiyum piriyāṉ * ĕṉ ūzhi mutalvaṉ ŏruvaṉe (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord Supreme, the first cause of all things, cannot bear to be apart even for a moment from my head, and equated me with Mount Tirumāliruñcōlai and the Milky Ocean. He covets my physical frame as He does the exalted SriVaikuntam and Mount Tiruvēṅkaṭam, despite my soul being entangled with material concerns through thought, word, and deed.

Explanatory Notes

(i) The Āzhvār is amazed at the astounding love exhibited by the Lord unto him, rather every inch of his body, easily the aggregate of the love borne by Him for the sacred centres of front-rank eminence, like Mount Tirumāliruñcōlai, Mount Tiruvēṅkaṭam, the Milky Ocean and the High spiritual worlds (Śrī Vaikuṇṭa). So deep and intense is the Lord’s love that He shall not + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; மலையே மலையையும்; திருப்பாற்கடலே திருப்பாற்கடலையும்; என் தலையே என் தலையையும்; திருமால் எம்பெருமானின்; வைகுந்தமே வைகுந்தத்தையும்; தண் குளிர்ந்த; திருவேங்கடமே திருமலையையும்; எனது உடலே என் சரீரத்தையும்; அரு மா மாயத்து பிரக்ருதியோடு கலந்த; எனது உயிரே என் ஆத்மாவையும்; மனமே வாக்கே என் மனதையும் வாக்கையும்; கருமமே என் செயல்களையும்; ஒரு மா நொடியும் ஒரு க்ஷண நேரமும் என்னை விட்டு; பிரியான் பிரியாதவனாய் இருப்பவன்; என் ஊழி ஸகல காரண பூதனான; முதல்வன் ஸர்வேச்வரன்; ஒருவனே ஒருவனே
en thalaiyĕ my head; thirumāl being ṣriya:pathi as said in -ṣriyāsārdham-, residing in; vaigundhamĕ paramapadham (spiritual realm); thaṇ invigorating; thiruvĕngadamĕ periya thirumalai (main divine hill); enadhu udalĕ my body; aru insurmountable; great; māyaththu united with the amaśing prakruthi (matter); enadhuyirĕ my āthmā (self); manamĕ mind; vākkĕ speech; karumamĕ action; oru mā nodiyum even a fraction of a moment; piriyān he is not separating; en ūzhi mudhalvan being the cause for all entities which are controlled by time, to acquire me; oruvanĕ he is the distinguished one!; ūzhi all entities which are under the control of time; mudhalvan oruvanĕ being the singular cause

TVM 10.7.9

3857 ஊழிமுதல்வனொருவனேயென்னும் ஒருவன் உலகெல்லாம் *
ஊழிதோறும்தன்னுள்ளேபடைத்துக்காத்துக் கெடுத்துழலும் *
ஆழிவண்ணனென்னம்மான் அந்தண்திருமாலிருஞ்சோலை *
வாழிமனமே! கைவிடேல் உடலுமுயிரும்மங்கவொட்டே.
3857 ஊழி முதல்வன் ஒருவனே என்னும் * ஒருவன் உலகு எல்லாம் *
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் **
ஆழிவண்ணன் என் அம்மான் * அம் தண் திருமாலிருஞ்சோலை *
வாழி மனமே! கைவிடேல்! * உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)
3857 ūzhi mutalvaṉ ŏruvaṉe ĕṉṉum * ŏruvaṉ ulaku ĕllām *
ūzhitoṟum taṉṉul̤l̤e paṭaittuk kāttuk kĕṭuttu uzhalum **
āzhivaṇṇaṉ ĕṉ ammāṉ * am taṇ tirumāliruñcolai *
vāzhi maṉame! kaiviṭel! * uṭalum uyirum maṅka ŏṭṭe (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Hold fast, my dear mind, to Mount Tirumāliruñcōlai, the serene abode where my majestic Lord resides. He is the sole creator of all things, orchestrating their existence and dissolution through His divine will alone. May my mind remain steadfast in devotion, seeking prosperity through the grace of the Lord, who I beseech to relinquish the hold over worldly allurements, hastening the natural course of life's decline.

Explanatory Notes

In the seventh song of this decad, the Āzhvār adored Mount Māliruñcōlai itself, as the one from which all that bliss, currently experienced by him, flows. For that very reason, the Āzhvār now advises his mind not to relax its grip on this mascot of a mountain. On hearing the Āzhvār’s address to his mind, the Lord would appear to have addressed Himself not to give up the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழி முதல்வன் ஸகல பொருள்களுக்கும் முதல்வன்; ஒருவன் ஒப்பற்ற; ஒருவனே என்னும் ஒருவனே என்னும்; உலகு எல்லாம் எல்லா உலகங்களையும்; ஊழி தோறும் படைக்க வேண்டிய காலந்தோறும்; தன்னுள்ளே தன்னுள்ளே; படைத்துக் காத்து படைத்துக் காத்து; கெடுத்து உழலும் ஸம்ஹாரங்களைச் செய்பவனாய்; அம் தண் அழகிய குளிர்ந்த; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; மலையில் இருக்கும் மலையில் இருக்கும்; ஆழி வண்ணன் ஆழி வண்ணனான; என் அம்மான் எம்பெருமானை; வாழி மனமே! நெஞ்சே!; கைவிடேல் விட்டுவிடாதே; உடலும் எனது சரீரத்தையும்; உயிரும் பிராணனையும் விரும்பாமல்; மங்க ஒட்டே வெறுக்க வேண்டும்
ennum as said in kāraṇa vākyams (statements which emphasise emperumān being the cause) such as -ĕkamĕva-; oruvan being distinguished; ulagu ellām all worlds; ūzhi thŏṛum all times which are favourable for creation etc; than ul̤l̤ĕ in a small portion of his divine will; padaiththu create; kāththu protect; keduththu annihilate; uzhalum conducting these, having as routine; āzhi vaṇṇan one who is unlimited; en ammān being my lord due to this apt relationship; am being beautiful; thaṇ invigorating; thirumālirunjŏlai thirumālirunjŏlai; manamĕ ŏh heart!; udalum uyirum our body, vital air etc are to be given up by us; manga to be destroyed; ottu go close and try to surrender unto;; kai vidĕl do not give it up until our task is accomplished;; vāzhi you should live long by this.; thirumālirunjŏlai in thirumālirunjŏlai hill; mĕya eternally residing

TVM 10.7.10

3858 மங்கவொட்டுஉன்மாமாயை திருமாலிருஞ்சோலைமேய *
நங்கள்கோனே! யானேநீயாகி என்னையளித்தானே! *
பொங்கைம்புலனும்பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் *
இங்கிவ்வுயிரேய்பிரகிருதி மானாங்காரமனங்களே.
3858 மங்க ஒட்டு உன் மா மாயை * திருமாலிருஞ்சோலை மேய *
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே **
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் * கருமேந்திரியம் ஐம்பூதம் *
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி * மான் ஆங்காரம் மனங்களே. (10)
3858 maṅka ŏṭṭu uṉ mā māyai * tirumāliruñcolai meya *
naṅkal̤ koṉe yāṉe nī āki ĕṉṉai al̤ittāṉe **
pŏṅku aimpulaṉum pŏṟi aintum * karumentiriyam aimpūtam *
iṅku iv uyir ey pirakiruti * māṉ āṅkāram maṉaṅkal̤e. (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord in Tirumāliruñcōlai, You are my great Savior, becoming one with me. Untangle me from the mysterious complexities of the five senses, the five sensory organs, the five motor organs, the five elements, and the conjunction of spirit with primordial matter. Deliver me from ego and mind.

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār pleaded lustily with the Lord that He should no longer desire his foul body but despise it. But the Lord could not desist from lavishing His affections on the Āzhvār’s body. In order to remedy this state of affairs, the Āzhvār had to bring home to the Lord the unwholesome composition of his

physical body and argue his case for + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலிருஞ்சோலை தெற்குத் திருமலையில்; மேய வாழ்கின்ற; நங்கள் கோனே! எம்பெருமானே!; யானே நீ ஆகி யானே நீ ஆகி; என்னை அளித்தானே! என்னை ரக்ஷித்தவனே!; பொங்கு சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் மணம்; ஐம்புலனும் ஆகிய ஐந்து புலன்களும்; பொறி செவி கண் மூக்கு வாய் சருமம் என்னும்; ஐந்தும் ஐந்து இந்திரியங்களும்; கருமேந்திரியம் கருமேந்திரியங்கள் ஐந்தும்; ஐம்பூதம் ஆகாசம் வாயு தீ நீர் நிலம் ஆகிய ஐந்து பூதங்களும்; இங்கு இவ் உயிர் ஸம்ஸார நிலைமையில் உயிரோடு; ஏய் பிரகிருதி கலந்த இருக்கும் பிரகிருதியையும்; மான் ஆங்காரம் மஹான் அஹங்காரம்; மனங்களே மனஸ் ஆகிய யாவும் உள்ள; உன் மா மாயை உன் மா மாயையான இந்த உடலை; மங்க ஒட்டு கழித்துவிட நீ இசையவேண்டும்
nangal̤ kŏnĕ being the one who is the lord for those who are like me; yānĕ nī āgi you being me without any difference between us, as if ī am giving the remedy myself; ennai me; al̤iththāy oh one who protected!; pongu rising (due to the enjoyment); aim pulanum five types of enjoyable aspects such as sound, touch, form, taste and smell; poṛi aindhum five traps- (the senses which trap in such aspects) eye, ear, nose, tongue and skin which are gyānĕndhriyams (senses of knowledge); karumĕndhiriyam five karmĕndhriyams (senses of action) which help in engaging in such aspects; aim būdham pancha būthams (five great elements) such as earth, water, air, fire and ether which are the abodes for ṣabdha etc and which are the cause for the body which holds the senses; ingu in this samsāram; i uyir ĕy being closely bound with the āthmā; pirakiruthi mūla prakruthi (primordial matter); mān mahān which facilitates creation; āngāram ahankāra which facilitates ego/intellect; manangal̤ mind which is the cause for sankalpa (will); un mā māyai your very amaśing prakruthi and effects of prakruthi; mangavottu mercifully agree to destroy them.; mānāngāra manam ṭhe connection with body through mahān, ahankāram and manas (mind); keda to be destroyed

TVM 10.7.11

3859 மானாங்காரமனம்கெட ஐவர்வன்கையர்மங்க *
தானாங்காரமாய்ப்புக்குத் தானேதானேயானானை *
தேனாங்காரப்பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள் *
மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே. (2)
3859 ## மான் ஆங்காரம் மனம் கெட * ஐவர் வன்கையர் மங்க *
தான் ஆங்காரமாய்ப் புக்கு * தானே தானே ஆனானை **
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் * சடகோபன் சொல் ஆயிரத்துள் *
மான் ஆங்காரத்து இவை பத்தும் * திருமாலிருஞ்சோலை மலைக்கே. (11)
3859 ## māṉ āṅkāram maṉam kĕṭa * aivar vaṉkaiyar maṅka *
tāṉ āṅkāramāyp pukku * tāṉe tāṉe āṉāṉai **
teṉ āṅkārap pŏzhil kurukūrc * caṭakopaṉ cŏl āyirattul̤ *
māṉ āṅkārattu ivai pattum * tirumāliruñcolai malaikke. (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

These ten songs, part of Caṭakōpaṉ's thousand, narrate how the Lord lovingly entered his body and soul, becoming one with him and severing his material attachments. They are dedicated to Mount Tirumāliruñcōlai, abounding in lovely orchards.

Explanatory Notes

That this decad pertains to the holy centre of Tirumāliruñcōlai is evident from every song in this decad. The special significance of this fact being mentioned in this end-song can, however, be appreciated in two ways, as indicated below:

(i) In 11-10, the Āzhvār had referred to this holy centre, abounding in orchards, young and gay, as one of bewildering charm. The + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் ஆங்காரம் மஹான் அஹங்காரம்; மனம் கெட மனம் என்னுமிவை கெடும்படியாகவும்; வன்கையர் கொடிய இந்திரியங்கள்; ஐவர் ஐந்தும்; மங்க தொலையும்படியாகவும்; தான் ஆங்காரமாய் தான் மிகுந்த செருக்கோடு; புக்கு என்னுள் புகுந்து; தானே தானே தானே ஆத்மாவாகவும்; ஆனானை ஆன பெருமானை; தேன் ஆங்கார வண்டுகள் ரீங்கரிக்கும்; பொழில் சோலைகள் சூழ்ந்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; மான் ஆங்காரத்து மஹான் அஹங்காரம் தொலைய; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும் திருமாலிருஞ்சோலை மலைக்கே விஷயமாயிற்று
vankaiyar very strong; aivar five senses; manga to be destroyed (along with their respective pleasure); thān āngāramāy being with great abhimānam (pride); pukku entered; thānĕ thānĕ ānānai one who became my self and belongings; thĕn āngāram prideful due to having beetles; pozhil having garden; kurugūrch chatakŏpan nammāzhvār who is the leader of āzhvārthirunagari; sol āyiraththul̤ among the thousand pāsurams mercifully spoken by him; thirumālirunjŏlai malaikkĕ exclusively for thirumālirunjŏlai hill; ivai paththum this decad; mānāngāraththu focussed on all hurdles which are indicated by mahath and ahankāram.; thirumālirunjŏlai malai enṛĕn enna as ī said thirumālirunjŏlai; thirumāl emperumān who is ṣriya:pathi (consort of ṣrī mahālakshmi) and who is very complete