Chapter 6

Āzhvār praises the Lord with all his heart for His blessing (Thiruvattāru) - (அருள்பெறுவார் அடியார்)

பரமன் அருளைப் பாராட்டி நெஞ்சோடு கூறல் (திருவாட்டாறு)
Even though emperumān had an insatiable desire to have Āzhvār, His wish to make Āzhvār sing the beautiful hymns took precedence, making Him curb His former desire and eagerly await for the right time to embrace Āzhvār. Since Āzhvār was nearing the completion of his beautiful rendition of the hymns, emperumān became impatient and wished to bestow Āzhvār + Read more
ஆழ்வாரைப் பெறவேண்டுமென்று எம்பெருமான் பெருவிடாய் கொண்டிருந்தும், ஆழ்வாரைக் கொண்டு அமுதன்ன சொல்மலைகள் பாடுவிக்க விரும்பியதால், தன்விடாயை அடக்கிக்கொண்டு, நேரத்தை எதிர்பார்த்திருக்க வேண்டியதாயிற்று. அந்தச் செயலும் ஒருவாறு முடிந்ததால், எம்பெருமான் மேலும் பொறுத்திருக்கமுடியாமல், திருவாட்டற்றிலே + Read more
Verses: 3838 to 3848
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
  • TVM 10.6.1
    3838 ## அருள்பெறுவார் அடியார் தம் * அடியனேற்கு * ஆழியான்
    அருள்தருவான் அமைகின்றான் * அது நமது விதிவகையே **
    இருள் தரு மா ஞாலத்துள் * இனிப் பிறவி யான் வேண்டேன் *
    மருள் ஒழி நீ மட நெஞ்சே * வாட்டாற்றான் அடி வணங்கே (1)
  • TVM 10.6.2
    3839 வாட்டாற்றான் அடி வணங்கி * மா ஞாலப் பிறப்பு அறுப்பான் *
    கேட்டாயே மட நெஞ்சே! * கேசவன் எம் பெருமானை **
    பாட்டு ஆய பல பாடிப் * பழவினைகள் பற்று அறுத்து *
    நாட்டாரோடு இயல்வு ஒழிந்து * நாரணனை நண்ணினமே (2)
  • TVM 10.6.3
    3840 நண்ணினம் நாராயணனை * நாமங்கள் பல சொல்லி *
    மண் உலகில் வளம் மிக்க * வாட்டாற்றான் வந்து இன்று **
    விண் உலகம் தருவானாய் * விரைகின்றான் விதிவகையே *
    எண்ணினவாறு ஆகா * இக் கருமங்கள் என் நெஞ்சே (3)
  • TVM 10.6.4
    3841 என் நெஞ்சத்து உள் இருந்து * இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து *
    வல் நெஞ்சத்து இரணியனை * மார்வு இடந்த வாட்டாற்றான் **
    மன் அஞ்ச பாரதத்துப் * பாண்டவர்க்காப் படைதொட்டான் *
    நல் நெஞ்சே நம் பெருமான் * நமக்கு அருள் தான் செய்வானே (4)
  • TVM 10.6.5
    3842 வான் ஏற வழி தந்த * வாட்டாற்றான் பணிவகையே *
    நான் ஏறப் பெறுகின்றேன் * நரகத்தை நகு நெஞ்சே! **
    தேன் ஏறு மலர்த் துளவம் * திகழ் பாதன் * செழும் பறவை
    தான் ஏறித் திரிவான * தாளிணை என் தலைமேலே (5)
  • TVM 10.6.6
    3843 தலைமேல தாள் இணைகள் * தாமரைக்கண் என் அம்மான் *
    நிலைபேரான் என் நெஞ்சத்து * எப்பொழுதும் எம் பெருமான் **
    மலை மாடத்து அரவு அணைமேல் * வாட்டாற்றான் மதம் மிக்க *
    கொலை யானை மருப்பு ஒசித்தான் * குரை கழல்கள் குறுகினமே (6)
  • TVM 10.6.7
    3844 குரை கழல்கள் குறுகினம் * நம் கோவிந்தன் குடிகொண்டான் *
    திரை குழுவு கடல் புடை சூழ் * தென் நாட்டுத் திலதம் அன்ன **
    வரை குழுவு மணி மாட * வாட்டாற்றான் மலர் அடிமேல் *
    விரை குழுவு நறும் துளவம் * மெய்ந்நின்று கமழுமே (7)
  • TVM 10.6.8
    3845 மெய்ந்நின்று கமழ் துளவ * விரை ஏறு திருமுடியன் *
    கைந்நின்ற சக்கரத்தன் * கருதும் இடம் பொருது புனல் **
    மைந்நின்ற வரை போலும் * திரு உருவ வாட்டாற்றாற்கு *
    எந் நன்றி செய்தேனா * என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)
  • TVM 10.6.9
    3846 திகழ்கின்ற திருமார்பில் * திருமங்கை தன்னோடும் *
    திகழ்கின்ற திருமாலார் * சேர்விடம் தண் வாட்டாறு **
    புகழ்நின்ற புள் ஊர்தி * போர் அரக்கர் குலம் கெடுத்தான் *
    இகழ்வு இன்றி என் நெஞ்சத்து * எப்பொழுதும் பிரியானே (9)
  • TVM 10.6.10
    3847 பிரியாது ஆட்செய் என்று * பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான் *
    அரி ஆகி இரணியனை * ஆகம் கீண்டான் அன்று **
    பெரியார்க்கு ஆட்பட்டக்கால் * பெறாத பயன் பெறுமாறு *
    வரி வாள் வாய் அரவு அணைமேல்! * வாட்டாற்றான் காட்டினனே (10)
  • TVM 10.6.11
    3848 ## காட்டித் தன் கனை கழல்கள் * கடு நரகம் புகல் ஒழித்த *
    வாட்டாற்று எம் பெருமானை * வளங் குருகூர்ச் சடகோபன் **
    பாட்டாய தமிழ் மாலை * ஆயிரத்துள் இப் பத்தும்
    கேட்டு * ஆரார் வானவர்கள் * செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)