Your browser does not support the audio element.
audio
3827 கண்ணன்கழலிணை *
நண்ணும்மனமுடையீர் *
எண்ணும்திருநாமம் *
திண்ணம்நாரணமே. (2)
3828 நாரணனெம்மான் *
பாரணங்காளன் *
வாரணம்தொலைத்த *
காரணன்தானே.
3829 தானேஉலகெல்லாம் *
தானேபடைத்திடந்து *
தானேஉண்டுமிழ்ந்து *
தானேயாள்வானே.
3830 ஆள்வானாழிநீர் *
கோள்வாயரவணையான் *
தாள்வாய்மலரிட்டு *
நாள்வாய்நாடீரே.
3831 நாடீர்நாள்தோறும் *
வாடாமலர்கொண்டு *
பாடீர்அவன்நாமம் *
வீடேபெறலாமே.
3832 மேயான் வேங்கடம் *
காயாமலர்வண்ணன் *
பேயார்முலையுண்ட *
வாயான்மாதவனே. (2)
3833 மாதவனென்றென்று *
ஓத வல்லீரேல் *
தீதொன்றும்அடையா *
ஏதம்சாராவே.
3834 சாராஏதங்கள் *
நீரார்முகில்வண்ணன் *
பேராரோதுவார் *
ஆராரமரரே.
3835 அமரர்க்கரியானை *
தமர்கட்கெளியானை *
அமரத்தொழுவார்கட்கு *
அமராவினைகளே.
3836 வினைவல்லிருளென்னும் *
முனைகள்வெருவிப்போம் *
சுனைநன்மலரிட்டு *
நினைமின்நெடியானே.
3837 நெடியானருள்சூடும் *
படியான்சடகோபன் *
நொடியாயிரத்திப்பத்து *
அடியார்க்கருள் பேறே. (2)