The Fragrance of Sacred Tulasī Wafts from the Holy Feet of the Lord of Vāṭṭāṟu.
வாட்டாற்றான் திருவடிகளில் திருத்துழாய் மணம் வீசும்
3844 குரைகழல்கள்குறுகினம் நம்கோவிந்தன் குடிகொண்டான் *
திரைகுழுவுகடல்புடைசூழ் தென்னாட்டுத்திலதமன்ன *
வரைகுழுவும்மணிமாட வாட்டாற்றான்மலரடிமேல் *
விரைகுழுவும்நறுந்துளவம் மெய்ந்நின்றுகமழுமே.