Our Lord Exists as Everything
எல்லாமாக எம்பிரான் உள்ளான்
2061 பொன்னானாய்! பொழிலேழும்காவல்பூண்ட
புகழானாய்! இகழ்வாயதொண்டனேன்நான் *
என்னானாய்! என்னானாய்! என்னலல்லால்
என்னறிவன்ஏழையேன் * உலகமேத்தும்
தென்னானாய்! வடவானாய்! குடபாலானாய்!
குணபாலமதயானாய்! இமையோர்க்குஎன்றும்
முன்னானாய்! * பின்னானார்வணங்கும்சோதி!
திருமூழிக்களத்தானாய்! முதலானாயே! (2)