O Foolish Mind! Do Not Forget Hari.
மூடமனமே! அரியை மறவாதே
2055 இந்திரற்கும்பிரமற்கும்முதல்வன்தன்னை
இருநிலம்கால்தீநீர்விண்பூதமைந்தாய் *
செந்திறத்ததமிழோசைவடசொல்லாகித்
திசைநான்குமாய்த்திங்கள்ஞாயிறாகி *
அந்தரத்தில்தேவர்க்கும்அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டுஅந்திவைத்த
மந்திரத்தை * மந்திரத்தால்மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம்மடநெஞ்சமே!