2767 மன்னும் வட மலையை மத்தாக, மாசுணத்தால் *
மின்னும் இரு சுடரும் விண்ணும், பிறங்கு ஒளியும் *
தன்னினுடனே சுழல, மலை திரித்து *
ஆங்கு இன் அமுதம் வானவரை ஊட்டி *
அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை * 57
2767 maṉṉum vaṭa malaiyai mattāka, mācuṇattāl *
miṉṉum iru cuṭarum viṇṇum, piṟaṅku ŏl̤iyum *
taṉṉiṉuṭaṉe cuzhala, malai tirittu *
āṅku iṉ amutam vāṉavarai ūṭṭi *
avaruṭaiya maṉṉum tuyar kaṭinta val̤l̤alai * 57