Chapter 2

Thirukkannapuram 2 - (தெள்ளியீர் தேவர்க்கும்)

திருக்கண்ணபுரம் 2
Thirukkannapuram 2 - (தெள்ளியீர் தேவர்க்கும்)
Sowriraja Perumal, the hero, has not shown grace to the āzhvār, the heroine. The heroine's body has become emaciated, and her complexion has changed. Observing this condition, the mother laments, criticizing the hero's nature and expressing sorrow for the heroine's youth. The āzhvār has structured this section in such a way that it reflects the mother's lamentation over the heroine's state.
ஆழ்வாராகிய தலைமகளுக்குச் சவுரிராஜப் பெருமாளாகிய தலைமகன் அருள் செய்யவில்லை. தலைவியின் உடல் மெலிந்தது. அவளது நிறம் மாறியது. அந்நிலை கண்ட தாய் தலைமகனது தன்மையைப் பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறுதல்போல் இப்பகுதியை அமைத்துள்ளனர் ஆழ்வார்.
Verses: 1658 to 1667
Grammar: Veṇṭaḷaiyālvanta Taravu Kocchakakkalippā / வெண்டளையால்வந்த தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will live long with fame on this earth surrounded with oceans
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.2.1

1658 தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் *
வெள்ளியீர்! வெய்யவிழுநிதிவண்ணர் * ஓ!
துள்ளுநீர்க் கண்ணபுரம்தொழுதாளிவள்
கள்வியோ! * கைவளைகொள்வதுதக்கதே? (2)
1658 ## தெள்ளியீர் தேவர்க்கும் * தேவர் திருத் தக்கீர் *
வெள்ளியீர் வெய்ய * விழு நிதி வண்ணர் ** ஓ
துள்ளு நீர்க் * கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? * கை வளை கொள்வது தக்கதே? 1
1658 ## tĕl̤l̤iyīr tevarkkum * tevar tirut takkīr *
vĕl̤l̤iyīr vĕyya * vizhu niti vaṇṇar ** o
tul̤l̤u nīrk * kaṇṇapuram tŏzhutāl̤ ival̤
kal̤viyo? * kai val̤ai kŏl̤vatu takkate?-1

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1658. Her mother says, O faultless god of the gods with the lovely color of a precious jewel who know everything, my daughter worships Kannapuram surrounded with crashing water. Is she a thief like you? Is it right for you to make her bangles grow loose?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தெள்ளியீர்! தெளிந்த அறிவு உடையவரே!; தேவர்க்கும் தேவர்! தேவர்களுகெல்லாம் தேவனே!; திருத் தக்கீர்! திருமகளுக்குத் தகுதியானவனே!; வெள்ளியீர்! சுத்தமான ஸ்வபாவத்தை உடையவரே!; வெய்ய விழு நிதி காய்ச்சின சிறந்த பொன் போன்ற; ஓ! வண்ணர்! நிறமுடையவரே!; துள்ளு நீர் கரைபுரண்டு பெருகும் நீரை உடைய; கண்ணபுரம் கண்ணபுரப் பெருமானை; தொழுதாள் இவள் இப்படித் தொழுத இவள்; கள்வியோ? கள்வியாக இருக்கமுடியுமோ? இவளுடைய; கை வளை கைவளைகளை; கொள்வது கொள்ளை கொள்வது; தக்கதே? தகுந்தது தானோ?

PT 8.2.2

1659 நீணிலாமுற்றத்து நின்றுஇவள்நோக்கினாள் *
காணுமோ! கண்ணபுரமென்றுகாட்டினாள் *
பாணனார்திண்ணமிருக்க இனிஇவள்
நாணுமோ? * நன்றுநன்றுநறையூரர்க்கே.
1659 நீள் நிலாமுற்றத்து * நின்று இவள் நோக்கினாள் *
காணுமோ * கண்ணபுரம் என்று காட்டினாள் **
பாணனார் திண்ணம் இருக்க * இனி இவள்
நாணுமோ? * நன்று நன்று நறையூரர்க்கே 2
1659 nīl̤ nilāmuṟṟattu * niṉṟu ival̤ nokkiṉāl̤ *
kāṇumo * kaṇṇapuram ĕṉṟu kāṭṭiṉāl̤ **
pāṇaṉār tiṇṇam irukka * iṉi ival̤
nāṇumo? * naṉṟu naṉṟu naṟaiyūrarkke-2

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1659. “My daughter stands in the courtyard where the bright moon shines and looks around and points to Kannapuram and says, ‘See that!’ She loves that Pananār so dearly and she is not ashamed to express her love for him. Surely she wants to go to Thirunaraiyur. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இவள் பரகாலநாயகி என்ற இந்தப் பெண்; நீள் நிலா முற்றத்து நிலா முற்றத்தில்; நின்று நின்று கொண்டு; நோக்கினாள் பார்த்தாள் பார்த்தபின்; காணுமோ மற்றவர்களுக்கும்; கண்ணபுரம்! இதோ கண்ணபுரம்; என்று காட்டினாள் என்று காட்டினாள்; பாணனார் பாடும் பாணர்கள்; திண்ணம் இருக்க திடமாக இருக்கும் போது; இனி இவள் இனி இப்படி சிக்ஷித்தப் போதிலும்; இவள் இந்தப் பெண்; நாணுமோ? வெட்கப்பட்டு மீளக்கூடுமோ?; நறையூரர்க்கே திருநறையூர் எம்பெருமானுக்கு; நன்று நன்று தன் எண்ணம் நன்றாய்த் தலைக்கட்டிற்று

PT 8.2.3

1660 அருவிசோர்வேங்கடம் நீர்மலையென்றுவாய்
வெருவினாள் * மெய்யம்வினவியிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இதுஎன்கொலோ? (2)
1660 ## அருவி சோர் வேங்கடம் * நீர்மலை என்று வாய்
வெருவினாள் * மெய்யம் வினவி இருக்கின்றாள் **
பெருகு சீர்க் * கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இது என்கொலோ? 3
1660 ## aruvi cor veṅkaṭam * nīrmalai ĕṉṟu vāy-
vĕruviṉāl̤ * mĕyyam viṉavi irukkiṉṟāl̤ **
pĕruku cīrk * kaṇṇapuram ĕṉṟu peciṉāl̤
urukiṉāl̤ * ul̤mĕlintāl̤ itu ĕṉkŏlo?-3

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1660. “My daughter prattles as Thiruneermalai and says, ‘Thiruvenkatam is a mountain filled with divine waterfalls that flow with abundant water, ’ and she asks, “Where is Thirumeyyam?” and says, ‘Kannapuram has excellent fame. ’ Her heart melts with his love and she grows weak. What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அருவி சோர் அருவிகள் சொரிகின்ற; வேங்கடம் திருமலையென்றும்; நீர் மலை திருநீர்மலையென்றும்; என்று வாய் சொல்லி பிதற்றுகிறாள்; மெய்யம் திருமெய்யத்தை; வெருவினாள் பற்றிக் கேள்வி கேட்டு; வினவி பதில் கிடைக்காததால்; இருக்கின்றாள் மறுபடியும்; பெருகு சீர்க் சீர்மை மிகுந்த; கண்ணபுரம் கண்ணபுரம்; என்று பேசினாள் என்று பேசினாள்; உருகினாள் உருகினாள்; உள் மெலிந்தாள் மனம் நொந்து மெலிந்தாள்; இது என் கொலோ? இது என்ன கஷ்டம்?

PT 8.2.4

1661 உண்ணும்நாளில்லை உறக்கமுந்தானில்லை *
பெண்மையும் சாலநிறைந்திலள் பேதைதான் *
கண்ணனூர் கண்ணபுரம்தொழும், கார்க்கடல்
வண்ணர்மேல் * எண்ணம்இவட்கு இதுஎன்கொலோ?
1661 உண்ணும் நாள் இல்லை * உறக்கமும் தான் இல்லை *
பெண்மையும் சால * நிறைந்திலள் பேதை தான் **
கண்ணன் ஊர் கண்ணபுரம் * தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் * எண்ணம் இவட்கு இது என்கொலோ? 4
1661 uṇṇum nāl̤ illai * uṟakkamum-tāṉ illai *
pĕṇmaiyum cāla * niṟaintilal̤ petai-tāṉ **
kaṇṇaṉ ūr kaṇṇapuram * tŏzhum kārk kaṭal
vaṇṇarmel * ĕṇṇam ivaṭku itu ĕṉkŏlo?-4

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1661. “My daughter doesn’t eat all day. She doesn’t sleep. She is innocent and young, not old enough to fall in love yet. He is worshiped by all in Kannapuram. How could she fall in love with the dark ocean-colored Kannan? Why does she do this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
உண்ணும் நாள் இல்லை இவள் ஒருநாளும் உண்பதில்லை; உறக்கமும் தான் இல்லை உறங்குவதுமில்லை; பெண்மையும் சால நன்றாக முதிர்ந்த பெண்மை; நிறைந்து இலள் பருவமுடையவள் அல்லள்; பேதை தான் இளம் பெண்தான்; கண்ணன் ஊர் கண்ணனின் ஊராகிய; கண்ணபுரம் தொழும் கண்ணபுரம் தொழுகிறாள்; எண்ணம் இவட்கு இவளுடைய எண்ணம் எல்லாம்; கார்க் கடல் கருத்த கடல் போன்ற; வண்ணர்மேல் நிறத்தை உடைய பெருமான் மேல் தான்; இது என் கொலோ! இது என்ன ஆச்சரியம்!

PT 8.2.5

1662 கண்ணனூர்கண்ணபுரம் தொழும்காரிகை *
பெண்மையும்தன்னுடை உண்மையுரைக்கின்றாள் *
வெண்ணெயுண்டுஆப்புண்ட வண்ணம்விளம்பினாள் *
வண்ணமும் பொன்னிறமாவதுஒழியுமே.
1662 கண்ணன் ஊர் * கண்ணபுரம் தொழும் காரிகை *
பெண்மை என்? தன்னுடை * உண்மை உரைக்கின்றாள் **
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட * வண்ணம் விளம்பினால் *
வண்ணமும் * பொன் நிறம் ஆவது ஒழியுமே 5
1662 kaṇṇaṉ ūr * kaṇṇapuram tŏzhum kārikai *
pĕṇmai ĕṉ? taṉṉuṭai * uṇmai uraikkiṉṟāl̤ **
vĕṇṇĕy uṇṭu āppuṇṭa * vaṇṇam vil̤ampiṉāl *
vaṇṇamum * pŏṉ niṟam āvatu ŏzhiyume-5

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1662. “My lovely daughter worships Kannapuram where Kannan stays. When she says, ‘I am a girl and I love the god, ’ she is telling the truth. Perhaps if she hears someone tell her how he stole and ate butter and how Yashodā tied him to a mortar, the pallid color of her body will change back to normal. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கண்ணன் ஊர் கண்ணனுடைய ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; தொழும் காரிகை தொழும் இவள் அழகானவள்; பெண்மையும் பெண்மையும் நிறைந்திலள்; தன்னுடை தன் மனதில்; உண்மை தோன்றும் உண்மையை; உரைக்கின்றாள் கூறுகிறாள்; வெண்ணெய் வெண்ணெய்; உண்டு ஆப்புண்ட உண்டு கட்டுப்பட்ட; வண்ணம் விஷயத்தை; விளம்பினால் யாராவது கூறினால்; வண்ணமும் இவளுடைய மேனி நிறமும்; பொன் நிறம் பொன் நிறம்; ஆவது ஆகிறது; ஒழியுமே அவளு டைய அழகும் போய்விடுகிறது

PT 8.2.6

1663 வடவரைநின்றும்வந்து இன்றுகணபுரம் *
இடவகைகொள்வது யாமென்று பேசினாள் *
மடவரல்மாதர்என்பேதை இவர்க்குஇவள்
கடவதென்? * கண்துயில் இன்றுஇவர்கொள்ளவே.
1663 வட வரை நின்றும் வந்து * இன்று கணபுரம்
இடவகை கொள்வது * யாம் என்று பேசினாள் **
மடவரல் மாதர் என் பேதை * இவர்க்கு இவள்
கடவது என் * கண் துயில் இன்று இவர் கொள்ளவே? 6
1663 vaṭa varai niṉṟum vantu * iṉṟu kaṇapuram
iṭavakai kŏl̤vatu * yām ĕṉṟu peciṉāl̤ **
maṭavaral mātar ĕṉ petai * ivarkku ival̤
kaṭavatu ĕṉ- * kaṇ tuyil iṉṟu ivar kŏl̤l̤ave?-6

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1663. “My daughter says, ‘I came to Thirukannapuram from Thirumālai in the north to be with the lord. ’ My beautiful daughter is innocent. Does she owe him anything? She cannot sleep at all. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வட வரை வடக்குத் திருமலையிலிருந்து; நின்றும் வந்து வந்து; இன்று கணபுரம் இன்று திருக்கண்ணபுரத்தை; இடவகை இருப்பிடமாக; கொள்வது யாம் கொண்டிருப்பது நானே; என்று பேசினாள் என்று பேசினாள்; மடவரல் அழகாலும்; மாதர் இவள் மரியாதையுடனும் இருக்கும்; என் பேதை என் பேதைப் பெண்ணுக்கும்; இவர்க்கு இப்பெருமானுக்கும் என்னப் ப்ராப்தி?; இன்று இவர் இன்று இவர்; கண் துயில் இவளுடைய உறக்கத்தை; கொள்ளவே கொள்ளை கொள்ள; கடவது என்? செய்யக் கூடியது தான் என்ன?

PT 8.2.7

1664 தரங்கநீர்பேசினும் தண்மதிகாயினும் *
இரங்குமோ? எத்தனைநாளிருந்துஎள்கினாள்? *
துரங்கம்வாய்கீண்டுகந்தானது தொன்மையூர் *
அரங்கமே யென்பது இவள்தனக்குஆசையே. (2)
1664 தரங்க நீர் பேசினும் * தண் மதி காயினும் *
இரங்குமோ? * எத்தனை நாள் இருந்து எள்கினாள் **
துரங்கம் வாய் கீண்டு உகந்தான் * அது தொன்மை * ஊர்
அரங்கமே என்பது * இவள் தனக்கு ஆசையே 7
1664 taraṅka nīr peciṉum * taṇ mati kāyiṉum *
iraṅkumo? * ĕttaṉai nāl̤ iruntu ĕl̤kiṉāl̤ **
turaṅkam vāy kīṇṭu ukantāṉ * atu tŏṉmai * ūr
araṅkame ĕṉpatu * ival̤-taṉakku ācaiye-7

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1664. “If my daughter hears the sound of the rolling waves of the ocean or sees the cool moon that shines bright she feels distress. She has been suffering like this for many days. She always says her only wish is to go to ancient Srirangam (on Kannapuram) where the god stays who split open the mouth of the Asuran when he came as a horse. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தரங்க நீர் பேசினும் அலை கடல் ஒலித்தாலும்; தண்மதி காயினும் குளிர்ந்த சந்திரன் காய்ந்தாலும்; இரங்குமோ? இவள் இளைப்பாளோ?; எத்தனை நாள் எத்தனை நாட்களாக; இருந்து ஈடுபட்டுள்ளாள்; எள்கினாள்! ஏற்கனவே இளைத்துவிட்டாள்; துரங்கம் குதிரை வடிவாக வந்த அசுரனுடைய; வாய் கீண்டு வாயைக் கிழித்தெறிந்த; உகந்தானது மகிழ்ந்த பெருமானுடைய; தொன்மை ஊர் தொன்மையான ஊர்; அரங்கமே திருவரங்கம் என்று; என்பது சொல்லிக்கொண்டிருப்பதே; இவள் இவளுடைய; தனக்கு ஆசையே ஆசையாயிருக்கிறது

PT 8.2.8

1665 தொண்டெல்லாம்நின்னடியே தொழுதுய்யுமா
கண்டு * தான்கணபுரம் தொழப்போயினாள் *
வண்டுலாம்கோதைஎன்பேதை மணிநிறம்
கொண்டுதான் * கோயின்மைசெய்வது தக்கதே?
1665 தொண்டு எல்லாம் நின் அடியே * தொழுது உய்யுமா
கண்டு * தான் கண்ணபுரம் * தொழப் போயினாள் **
வண்டு உலாம் கோதை என் பேதை * மணி நிறம்
கொண்டு தான் * கோயின்மை செய்வது தக்கதே? 8
1665 tŏṇṭu ĕllām niṉ aṭiye * tŏzhutu uyyumā
kaṇṭu * tāṉ kaṇṇapuram * tŏzhap poyiṉāl̤ **
vaṇṭu ulām kotai ĕṉ petai * maṇi niṟam
kŏṇṭu tāṉ * koyiṉmai cĕyvatu takkate?-8

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1665. “All devotees go to Thirukkannapuram to worship your feet and you protect them. My daughter sees that and wants to go there and worship you. The jewel-like body of my innocent daughter with hair that swarms with bees has grown pale. Do you think it is right to make her suffer like this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தொண்டு எல்லாம் எல்லா பக்தர்களும்; நின் அடியே உன் திருவடியையே; தொழுது தொழுது; உய்யுமா கண்டு உய்ந்து போவதைப்பார்த்து; தான் இவளும்; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; தொழப் போயினாள் தொழப் போனாள்; வண்டு வண்டுகள்; உலாம் கோதை உலாவும் கூந்தலையுடைய; என் பேதை என் பேதைப் பெண்ணின்; மணி அழகிய மேனி; நிறம் கொண்டு நிறத்தைக் கொள்ளைகொண்ட; தான் பெருமானாகிய; கோயின்மை நீ இப்படி அநியாயம்; செய்வது தக்கதே செய்வது நியாமோ?

PT 8.2.9

1666 முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா *
தெள்ளியளென்பதோர்தேசிலள் என்செய்கேன்? *
கள்ளவிழ்சோலைக் கணபுரம்கைதொழும்
பிள்ளையை * பிள்ளையென்றெண்ணப்பெறுவரே?
1666 முள் எயிறு ஏய்ந்தில * கூழை முடிகொடா *
தெள்ளியள் என்பது ஓர் * தேசு இலள் என் செய்கேன் **
கள் அவிழ் சோலைக் * கணபுரம் கை தொழும்
பிள்ளையை * பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 9
1666 mul̤ ĕyiṟu eyntila * kūzhai muṭikŏṭā *
tĕl̤l̤iyal̤ ĕṉpatu or * tecu ilal̤ ĕṉ cĕykeṉ **
kal̤ avizh colaik * kaṇapuram kai tŏzhum
pil̤l̤aiyai * pil̤l̤ai ĕṉṟu ĕṇṇap pĕṟuvare?-9

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1666. “My daughter does not have all her teeth yet. Her hair has not yet grown thick and you can’t say that she understands things. What can I do? She wants to see the god in Thirukkannapuram filled with groves blooming with flowers that drip honey. How can I think this child is really innocent?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
எயிறு முள் எல்லா பற்களும் என் பெண்ணுக்கு; ஏய்ந்தில முளைத்தபாடில்லை; கூழை முடி கூந்தலும் முடியும்படி; கொடா வளரவில்லை; தெள்ளியல் விவேகமுடையவள்; என்பது என்று சொல்லும்படி; ஓர் தேசு தேஜஸ்ஸை; இலள் உடையவள் அல்லள்; என் செய்கேன்! என் செய்கேன்; கள் அவிழ் தேன் பெருகும்; சோலை சோலை சூழ்ந்த; கணபுரம் திருக்கண்ணபுரத்தை; கை தொழும் கையெடுத்து வணங்கும்; பிள்ளை பிள்ளையை; பிள்ளையைப் என்று தான் பெற்ற பிள்ளையென்று; எண்ண பெறுவரே எண்ண பெறுவரோ?

PT 8.2.10

1667 கார்மலி கண்ணபுரத்தெம்மடிகளை *
பார்மலிமங்கையர்கோன் பரகாலன்சொல் *
சீர்மலிபாடல் இவைபத்தும்வல்லவர் *
நீர்மலிவையத்து நீடுநிற்பார்களே. (2)
1667 ## கார் மலி * கண்ணபுரத்து எம் அடிகளை *
பார் மலி மங்கையர் கோன் * பரகாலன் சொல் **
சீர் மலி பாடல் * இவை பத்தும் வல்லவர் *
நீர் மலி வையத்து * நீடு நிற்பார்களே 10
1667 ## kār mali * kaṇṇapurattu ĕm aṭikal̤ai *
pār mali maṅkaiyar-koṉ * parakālaṉ cŏl **
cīr mali pāṭal * ivai pattum vallavar *
nīr mali vaiyattu * nīṭu niṟpārkal̤e-10

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1667. Kaliyan, Yama to his enemies, praised by all the people of the world, the king of Thirumangai filled with clouds in the sky composed ten wonderful divine pāsurams on Thirukannapuram. If devotees learn and recite these pāsurams they will live long with fame on this earth surrounded with oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கார் மலி மேகங்கள் நிறைந்த; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; எம் அடிகளை எம் ஸ்வாமியைக் குறித்து; பார் மலி உலகில் புகழ் மிக்க; மங்கையர் கோன் திருமங்கை மன்னன்; பரகாலன் திருமங்கையாழ்வார்; சொல் அருளிச்செய்த; சீர் மலி பாடல் சிறப்பு மிக்க பாடல்களான; இவை பத்தும் இந்த பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் ஓத வல்லார்; நீர் மலி வையத்து கடல் சூழ்ந்த பூமியில்; நீடு நிற்பார்களே நீண்டகாலம் வாழ்வார்கள்