Thirumayam
Your browser does not support the audio element.
audio
1206 நிலையாளா! நின்வணங்க வேண்டாயேயாகிலும் * என்
முலையாள ஒருநாள் உன்அகலத்தால் ஆளாயே? *
சிலையாளா! மரமெய்ததிறலாளா! திருமெய்ய
மலையாளா! * நீயாள வளையாளமாட்டோமே.
1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
1660 அருவிசோர்வேங்கடம் நீர்மலையென்றுவாய்
வெருவினாள் * மெய்யம்வினவியிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இதுஎன்கொலோ? (2)
1760 வேயிருஞ்சோலைவிலங்கல்சூழ்ந்த
மெய்யமணாளர், இவ்வையமெல்லாம் *
தாயினநாயகராவர்தோழீ!
தாமரைக்கண்களிருந்தவாறு *
சேயிருங்குன்றம்திகழ்ந்ததொப்பச்
செவ்வியவாகிமலர்ந்தசோதி *
ஆயிரம்தோளொடுஇலங்குபூணும்
அச்சோஒருவரழகியவா!
1852 சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்
நடலைதீர்த்தவனை நறையூர்க்கண்டு * என்
உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *
விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துள்ளே.
2016 மையார்கடலும் மணிவரையும்மாமுகிலும் *
கொய்யார்குவளையும் காயாவும்போன்றுஇருண்ட
மெய்யானை * மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை * கைதொழா கையல்லகண்டாமே.
2050 பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -