Your browser does not support the audio element.
audio
1508 ஆளும்பணியும்அடியேனைக்கொண்டான் * விண்டநிசாசரரை
தோளும்தலையும்துணிவெய்தச் சுடுவெஞ்சிலைவாய்ச்சரந்துரந்தான் *
வேளும்சேயும்அனையாரும் வேற்கணாரும்பயில்வீதி *
நாளும்விழவினொலியோவா நறையூர்நின்றநம்பியே. (2)
1509 முனியாய்வந்துமூவெழுகால் முடிசேர்மன்னருடல்துணிய *
தனிவாய்மழுவின்படையாண்டதாரார்தோளான், வார்புறவில் *
பனிசேர்முல்லைபல்லரும்பப் பானல்ஒருபால்கண்காட்ட *
நனிசேர்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1510 தெள்ளார்கடல்வாய் விடவாயசினவாளரவில்துயிலமர்ந்து *
துள்ளாவருமான்விழ வாளிதுரந்தான், இரந்தான்மாவலிமண் *
புள்ளார்புறவில்பூங்காவி புலங்கொள்மாதர்கண்காட்ட *
நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1511 ஓளியாவெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சியொண்கயிற்றால் *
விளியாஆர்க்கஆப்புண்டு விம்மியழுதான், மென்மலர்மேல் *
களியாவண்டுகள்ளுண்ணக் காமர்தென்றல்அலர்தூற்ற *
நளிர்வாய்முல்லைமுறுவலிக்கும் நறையூர்நின்றநம்பியே.
1512 வில்லார்விழவில்வடமதுரைவிரும்பி விரும்பாமல்லடர்த்து *
கல்லார்திரள்தோள்கஞ்சனைக்காய்ந்தான் பாய்ந்தான்காளியன்மேல் *
சொல்லார்சுருதிமுறையோதிச் சோமுச்செய்யும்தொழிலினோர் *
நல்லார்மறையோர்பலர்வாழும்நறையூர்நின்றநம்பியே.
1513 வள்ளிகொழுநன்முதலாய மக்களோடுமுக்கணான்
வெள்கியோட * விறல்வாணன்வியன்தோள்வனத்தைத் துணித்துகந்தான் *
பள்ளிகமலத்திடைப்பட்ட பகுவாயலவன்முகம்நோக்கி *
நள்ளியூடும்வயல்சூழ்ந்த நறையூர்நின்றநம்பியே.
1514 மிடையாவந்தவேல்மன்னர்வீய விசயன்தேர்கடவி *
குடையாவரையொன்றெடுத்துஆயர்கோவாய்நின்றான் கூராழிப்
படையான் * வேதம்நான்குஐந்துவேள்வி அங்கமாறு இசையேழ் *
நடையாவல்லஅந்தணர்வாழ் நறையூர்நின்றநம்பியே.
1515 பந்தார்விரலாள்பாஞ்சாலி கூந்தல்முடிக்கப், பாரதத்து *
கந்தார்களிற்றுக்கழல்மன்னர்கலங்கச் சங்கம்வாய்வைத்தான் *
செந்தாமரைமேலயனோடு சிவனும் அனையபெருமையோர் *
நந்தாவண்கைமறையோர்வாழ் நறையூர்நின்றநம்பியே.
1516 ஆறும்பிறையும்அரவமும்அடம்பும் சடைமேலணிந்து * உடலம்
நீறும்பூசியேறூரும்இறையோன் சென்றுகுறையிரப்ப *
மாறொன்றில்லாவாசநீர் வரைமார்வகலத்தளித்துகந்தான் *
நாறும்பொழில்சூழ்ந்தழகாய நறையூர்நின்றநம்பியே.
1517 நன்மையுடையமறையோர்வாழ் நறையூர்நின்றநம்பியை *
கன்னிமதில்சூழ்வயல்மங்கைக் கலியனொலிசெய்தமிழ்மாலை *
பன்னிஉலகில்பாடுவார் பாடுசாராபழவினைகள் *
மன்னிஉலகம்ஆண்டுபோய் வானோர்வணங்கவாழ்வாரே. (2)