PT 3.8.6

பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்

1223 பண்நேர்மொழிஆய்ச்சியர்அஞ்ச வஞ்சப்
பகுவாய்க்கழுதுக்குஇரங்காது * அவள்தன்
உண்ணாமுலைமற்றவளாவியோடும்
உடனேசுவைத்தானிடம் * ஓங்குபைந்தாள்
கண்ணார்கரும்பின்கழைதின்றுவைகிக்
கழுநீரில்மூழ்கிச்செழுநீர்த்தடத்து *
மண்ணேந்துஇளமேதிகள்வைகு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.6
1223 பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் *
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது * அவள் தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் *
உடனே சுவைத்தான் இடம் ** ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக் *
கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து *
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 6
1223 paṇ ner mŏzhi āycciyar añca vañcap *
paku vāyk kazhutukku iraṅkātu * aval̤-taṉ
uṇṇā mulai maṟṟu aval̤ āviyoṭum *
uṭaṉe cuvaittāṉ iṭam ** oṅku pain tāl̤
kaṇ ār karumpiṉ kazhai tiṉṟu vaikik *
kazhunīril mūzhkic cĕzhu nīrt taṭattu *
maṇ entu il̤a metikal̤ vaiku nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-6

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1223. Our lord who did not feel sorry for Putanā when he drank the milk from her breasts and killed her while the cowherd women whose words are sweeter than music looked on terrified stays in Manimādakkoyil in Thirunāgur where young buffaloes eat canes of sugarcane, plunge into the muddy water of the ponds and come out carrying mud on their horns. O heart, let us go to Nāngur and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பண் நேர் பண்ணிசையை ஒத்த; மொழி பேச்சையுடைய; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; அஞ்ச பயப்படும்படியான உருவத்தோடு வந்த; வஞ்சப் பகு வஞ்சனையையும் பெரிய; வாய் வாயையுமுடைய; கழுதுக்கு பூதனையிடம்; இரங்காது தான் துன்பப்படாமல்; அவள் தன் அவளுடைய உண்ணத் தகாத; உண்ணா முலை விஷப்பாலை; மற்று அவள் அவளுடைய; ஆவியோடும் உயிரையும் சேர்த்து; உடனே சுவைத்தான் உண்ட பெருமானுடைய; இடம் இருப்பிடம்; இள மேதிகள் இளைய எருமைக்கன்றுகள்; ஓங்கு பைந் தாள் உயர்ந்த பச்சிளந்தாள்களையுடைய; கண் ஆர் கரும்பின் கணுக்கள் நிறைந்த கரும்புகளின்; கழை தின்று குருத்தைத் தின்று; வைகி சில காலம் அங்கேயே இருந்து; கழுநீரில் மூழ்கி செங்கழுநீர் பூக்களையுடைய; செழு நீர்த் தடத்து தடாகத்தில் முழுகி; மண் ஏந்து கொம்புகளில் மண்ணைக் கொண்டு; வைகும் நாங்கூர் கரையேறாது கிடக்கும் திருநாங்கூரிலே; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
paṇ nĕr matching a song; mozhi having speech; āychchiyar cowherd girls; anja to fear; vanjam deceit of coming in mother-s form; pagu vāy having huge mouth; kazhudhukku in pūthanā (the demon); irangādhu without him suffering; aval̤ than her; uṇṇā due to being poisoned, none other could consume; mulai breast milk; maṝu further; aval̤ āviyŏdum with her life; udanĕ suvaiththān krishṇa who mercifully consumed simultaneously, his; idam being the abode; il̤a mĕdhigal̤ buffalo calves; ŏngu tallness; paim thāl̤ greenish bottoms; kaṇ ār having narrow joints; karumbin sugarcanes-; kazhai thinṛu eating the shoots; vaigi stayed in the same place for some time; kazhu nīril in the water-body with sengazhunīr (purple īndian water lily) flowers; mūzhgi entered and immersed; sezhu nīrth thadaththu immersed in the pond having beautiful water; maṇ ĕndhu holding mud on horns; vaigum remaining there without climbing on the shore; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender