PT 3.8.7

காளியன்மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்

1224 தளைக்கட்டவிழ்தாமரைவைகுபொய்கைத்
தடம்புக்கு, அடங்காவிடங்கால்அரவம் *
இளைக்கத்திளைத்திட்டுஅதனுச்சிதன்மேல்
அடிவைத்தஅம்மானிடம் * மாமதியம்
திளைக்கும்கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்துவெண்ணெற்கெனச்சென்று * முன்றில்
வளைக்கைநுளைப்பாவையர்மாறு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.7
1224 tal̤aik kaṭṭu avizh tāmarai vaiku pŏykait *
taṭam pukku aṭaṅkā viṭam kāl aravam *
il̤aikkat til̤aittiṭṭu ataṉ ucci-taṉmel *
aṭi vaitta ammāṉ iṭam ** mā matiyam
til̤aikkum kŏṭi māl̤ikai cūzh tĕruvil *
cĕzhu muttu vĕṇṇĕṟku ĕṉac cĕṉṟu * muṉṟil
val̤aikkai nul̤aip pāvaiyar māṟum nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-7

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1224. Our father who went into the pond of blooming lotuses, fought with the snake Kālingan, defeated him and danced on his head stays in Manimādakkoyil in Thirunāgur where gypsies ornamented with lovely bangles walk on the streets by the palaces where flags fly, and, standing in their front yards, sell pearls, saying, “We will give you precious pearls for white rice. ” O heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தளைக் கட்டு மொட்டுத் தாமரையும்; அவிழ் தாமரை வைகு அலர்ந்த தாமரையும் இருக்கும்; பொய்கைத் தடம் புக்கு பொய்கையிலே புகுந்து; அடங்கா விடம் அடங்காமல் எழுந்த; கால் அரவம் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம்; இளைக்க இளைத்துப்போகும்படி; திளைத்திட்டு விளையாடி; அதன் உச்சி தன் மேல் அதன் தலைமேலே; அடி வைத்த காலை வைத்த; அம்மான் இடம் பெருமான் இருக்குமிடம்; வளைக்கை நுளை வளையணிந்த ஆய்ச்சியர்; மா மதியம் சந்திரனைத் தொடுமளவு; திளைக்கும் கொடி கொடிகளையுடைய; மாளிகைசூழ் தெருவில் மாளிகைகள் நிறைந்த வீதியிலே; செழு முத்து சிறந்த முத்துக்களை; வெண்ணெற்கு வெளுத்த நெல்லுக்குத் தருகிறோம் என்று; எனச் சென்று கூவிக்கொண்டு; முன்றில் வீடுகள்தோறும் சென்று; மாறும் விற்பனை செய்யும்; பாவையர் பெண்கள் இருக்கும்; நாங்கூர் நாங்கூரில் உள்ள; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
thal̤aith thāmarai unblossomed lotus flower; kattu avizh thāmarai blossomed lotus flower; vaigu present; poygaith thadam in the pond; pukku entered; adangā (inside that) without remaining submissive, rising; vidam kāl ejecting poison; aravam kāl̤iyan (the snake); il̤aikka to become weak; thil̤aiththittu played (with it); adhan uchchi than mĕl on its head; adi vaiththa placed the divine feet and eliminated its pride; ammān sarvĕṣvaran-s; idam being the abode; val̤aikkai having hands which are decorated with bangles; nul̤aip pāvaiyar tribal girls [fisher folk]; mā madhiyam the moon; thil̤aikkum (being unable to cross) to play there; kodi having flags; māl̤igai sūzh surrounded by mansions; theruvil in the streets; sezhu muththu huge pearls; veṇ neṛku for white paddy; ena saying that they are bartering and going; munṛil in front of everyone-s house; senṛu māṛum voluntarily going and exchanging; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender