PT 2.7.10

இவற்றைப் பாடுவோர் பழவினை நீங்கும்

1117 அன்னமும்மீனும் ஆமையும்அரியும்
ஆயஎம்மாயனே! அருளாய் *
என்னும்இன்தொண்டர்க்கு இன்னருள்புரியும்
இடவெந்தை எந்தைபிரானை *
மன்னுமாமாடமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
பன்னியபனுவல்பாடுவார் நாளும்
பழவினைபற்றறுப்பாரே. (2)
PT.2.7.10
1117 ## aṉṉamum mīṉum āmaiyum ariyum āya * ĕm māyaṉe arul̤āy *
ĕṉṉum iṉ tŏṇṭarkku iṉ arul̤ puriyum * iṭavĕntai ĕntai pirāṉai *
maṉṉu mā māṭa maṅkaiyar talaivaṉ * māṉavel kaliyaṉ vāy ŏlikal̤ *
paṉṉiya paṉuval pāṭuvār * nāl̤um pazhaviṉai paṟṟu aṟuppāre-10

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1117. He who came as Swan and Fish, as Tortoise and fierce Lion —our wondrous Lord who took these forms for our sake! To the devotees who sweetly cry out, "Grant us Your grace!" He grants His sweet, unfailing mercy. That Lord of Thiruvidavēnthai, is praised by Kaliyan, the valorous one with the noble spear, chief of radiant Thirumangai, the place with lofty mansions. Those who sing these divine verses, day after day with love , they will cut away the bonds of their ancient karmas, completely and forever.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்னமும் மீனும் ஹம்ஸாவதாரமும் மத்ஸ்யாவதாரமும்; ஆமையும் அரியும் கூர்மாவதாரமும் நரஸிம்மாவதாரமுமாக; ஆய எம் மாயனே! அவதரித்த எம்பெருமானே!; அருளாய் என்னும் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிற; இன் தொண்டர்க்கு பரம பக்தர்களுக்கு; இன் அருள் புரியும் இன் அருள் புரியும்; இடவெந்தை எந்தை பிரானை இடவெந்தை பிரானைக் குறித்து; மன்னு மா மாட பெரிய மாடங்களையுடைய; மங்கையர் தலைவன் திருமங்கைக்குத் தலைவரும்; மானவேல் சிறந்த வேலை உடையவருமான; கலியன் திருமங்கை ஆழ்வார்; வாய் ஒலிகள் அருளிச்செய்த சிறந்த; பன்னிய பனுவல் இப்பாசுரங்களை; பாடுவார் நாளும் அனுஸந்திப்பவர்கள் எந்நாளும்; பழவினை தங்கள் பூர்வ கர்மங்களின்; பற்று அறுப்பாரே சம்பந்தம் முற்றிலுமாக போக்குவர்
annamum hamsāvathāram; mīnum mathsyāvathāram; āmaiyum kūrmāvathāram; ariyumāya one who mercifully performed narasimhāvathāram as well; em māyanĕ ŏh you who are my lord having amaśing abilities!; arul̤āy mercifully shower your mercy; ennum one who prays; in distinguished; thoṇdarkku servitors; in arul̤ puriyum one who gives his great mercy; idavendhai endhai pirānai on nithya kalyāṇan who is eternally residing in thiruvidavendhai; mannum remaining eternally (surviving even the deluge); huge; mādam having mansions; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the leader; mānam having broad leaf; vĕl holding the spear; kaliyan āzhvār-s; vāy in the divine lips; oli to become famous; panniya mercifully elaborated; panuval songs; pāduvār those who can recite, being stimulated by love; nāl̤um forever; pazhavinai their past karmas-; paṝu relationship; aṛuppār will eliminate along with the traces.

Āchārya Vyākyānam

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

மாயனே–ஆச்சர்ய சக்தி உக்தன் – மான-பரிமாணம் அகன்ற இலை-

——————————————————————–

வியாக்யானம் –

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்

+ Read more