PT 2.7.9

உனது நினைவால் என் மகளின் உருவம் மாறியது

1116 பொன்குலாம்பயலை பூத்தனமென்தோள்
பொருகயற்கண்துயில்மறந்தாள் *
அன்பினால்உன்மேல் ஆதரம்பெரிது
இவ்வணங்கினுக்குஉற்றநோய்அறியேன் *
மின்குலாமருங்குல்சுருங்கமேல்நெருங்கி
வீங்கியவனமுலையாளுக்கு *
என்கொலாம்? குறிப்பில் என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
PT.2.7.9
1116 pŏṉ kulām payalai pūttaṉa mĕṉ tol̤ * pŏru kayal kaṇ tuyil maṟantāl̤ *
aṉpiṉāl uṉmel ātaram pĕritu * iv aṇaṅkiṉukku uṟṟa noy aṟiyeṉ *
miṉ kulām maruṅkul curuṅka mel nĕruṅki * vīṅkiya vaṉa mulaiyāl̤ukku *
ĕṉkŏl ām? kuṟippil ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe 9

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1116. Her mother says, “Her soft arms have become pallid and gold. Her fish-like eyes do not close and she can’t sleep. She loves you beyond any limit. I don’t know what sickness my beautiful girl has. Her waist is like lightning, and her lovely round breasts are swelling out. What could have happened to her? What do you think you can do for her, O father, lord of Thiruvidaventhai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மென் தோள் மென்மையான தோள்கள்; பொன் குலாம் பொன்னிறமான; பயலை பூத்தன பசலை பூத்தன; பொரு கயல் சண்டையிடும் கயல் மீன்கள் போன்ற; கண் கண்களையுடைய இவள்; துயில் மறந்தாள் தூக்கத்தை மறந்துவிட்டாள்; அன்பினால் உன் மேல் உன் விஷயத்தில் காதலானது; ஆதரம் பெரிது அதிகமாகப் பெருகுகிறது; இவ் அணங்கினுக்கு இப்பெண்ணுக்கு உண்டான; உற்ற நோய் அறியேன் வியாதியை அறியேன்; மின் குலாம் மின்னல் போன்ற; மருங்குல் சுருங்க இடை சுருங்க; மேல் நெருங்கி மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருங்கி; வீங்கிய வன வீங்கிய அழகிய; முலையாளுக்கு மார்பகங்களையுடைய; என்கொல் ஆம்? இம்மகளுக்கு என்ன ஆகுமோ?; குறிப்பில் இவளைப்பற்றி; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
mel slim; thŏl̤ shoulders; pon golden complexion; kulāvum having; payalai pūththana became pale;; poru fighting with each other; kayal like kayal fish; kaṇ in the eyes; thuyil having sleep; maṛandhāl̤ forgotten;; un mĕl in your matters; anbināl love; ādharam desire; peridhu is increasing further;; ivvaṇanginukku for this girl who is beautiful; uṝa acquired; nŏy disease; aṛiyĕn ī do not know;; min lightning; kulām having (curved); marungul waist; surunga to shrink; mĕl on top; nerungi fitting with each other; vīngiya well grown; vanam beautiful; mulaiyāl̤ukku for the one who has bosoms; en ām kol how will it end?; kuṛippil in your divine heart; en ninaindhirundhāy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirānĕ ŏh lord of my clan!; sollu ẏou should mercifully speak a word.