Chapter 6

Experiencing the simplicity of Krishna Avataram compared to others - (எங்கானும் ஈது)

மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்
Experiencing the simplicity of Krishna Avataram compared to others - (எங்கானும் ஈது)
The magnificence of Krishna, the mischievous butter thief. In Thiruvayppadi, Krishna stole and devoured curd, ghee, and milk. Caught by the gopis, He was tied up with a rope, and He stood there, yearning. Those who realized Krishna's true greatness were astonished that someone so exalted could exhibit such simplicity. The āzhvār relishes narrating this event in his verses, blending the Lord's simplicity and magnificence in each verse, and experiencing them with great joy.
மாயன் வெண்ணெயுண்ட மாட்சிமை. கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் தயிர், நெய், பால் முதலியவற்றைக் களவு செய்து வாரி உண்டான்; இடைச்சியர் கையில் சிக்குண்டு, தாம்பினால் கட்டப்பட்டு ஏங்கி இருந்தான். கண்ணனின் உண்மையான மேன்மையை உணர்ந்தவர்கள்; மேன்மை தங்கிய இவன் இவ்வளவு எளிமையில் இருக்கிறானே என்று + Read more
Verses: 1898 to 1907
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma and go to Vaikuṇṭam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.6.1

1898 எங்கானும்ஈதொப்பதோர்மாயமுண்டே?
நரநாரணனாய்உலகத்துஅறநூல் *
சிங்காமைவிரித்தவன்எம்பெருமான்
அதுவன்றியும்செஞ்சுடரும்நிலனும் *
பொங்கார்கடலும்பொருப்பும்நெருப்பும்நெருக்கிப்
புகப் பொன்மிடறுஅத்தனைபோது *
அங்காந்தவன்காண்மின்இன்றுஆய்ச் சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே. (2)
1898 ## எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? *
நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் *
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் *
அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் **
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புகப் * பொன் மிடறு அத்தனைபோது *
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 1
1898 ## ĕṅkāṉum ītu ŏppatu or māyam uṇṭe? *
-nara nāraṇaṉ āy ulakattu aṟanūl *
ciṅkāmai virittavaṉ ĕm pĕrumāṉ *
atu aṉṟiyum cĕñcuṭarum nilaṉum **
pŏṅku ār kaṭalum pŏruppum nĕruppum
nĕrukkip pukap * pŏṉ miṭaṟu attaṉaipotu *
aṅkāntavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-1

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1898. Is there a māyam like this? The lord Nārāyanan came to the earth as a man and taught the Vedās to the sages so that the Vedās would not disappear. With his golden throat he swallowed the hot sun, earth, rising oceans, mountains and fire and kept them in his stomach. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நர நரனாகவும்; நாரணனாய் நாரணனாகவும்; உலகத்து உலகத்தில்; அற நூல் தர்ம சாஸ்திரமான வேத நூல்; சிங்காமை சுருங்கிப் போகாதபடி; விரித்தவன் விவரித்த; எம் பெருமான் எம் பெருமான்; அது அன்றியும் அதுவும் அல்லாமல்; செஞ்சுடரும் சந்திர-ஸூர்யர்களும்; நிலனும் பூமியும்; பொங்கு ஆர் கடலும் அலைகடலும்; பொருப்பும் மலைகளும்; நெருப்பும் அக்னியும் ஆகிய இவை அனைத்தையும்; பொன் மிடறு பொன் போன்ற வயிற்றில்; நெருக்கி நெருக்கி; புக அத்தனைபோது உள்ளே புகு மளவும்; அங்காந்தவன் விரித்துக் கொண்டிருந்தவன்; காண்மின் காணீர்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!; ஈது ஒப்பது ஓர் மாயம் இதுபோன்ற ஆச்சரியம்; எங்கானும் உண்டே? எங்கேனும் கண்டதுண்டோ?

PT 10.6.2

1899 குன்றொன்றுமத்தாஅரவமளவிக்
குரைமாகடலைக்கடைந்திட்டு * ஒருகால்
நின்றுஉண்டைகொண்டோட்டிவன்கூன்நிமிர
நினைத்தபெருமான், அதுவன்றியும்முன் *
நன்றுண்டதொல்சீர்மகரக்கடலேழ்
மலையேழ்உலகேழ்ஒழியாமைநம்பி *
அன்றுண்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1899 குன்று ஒன்று மத்தா அரவம் அளவிக் *
குரை மா கடலைக் கடைந்திட்டு * ஒருகால்
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர *
நினைந்த பெருமான் அது அன்றியும் முன் **
நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் *
உலகு ஏழ் ஒழியாமை நம்பி *
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 2
1899 kuṉṟu ŏṉṟu mattā aravam al̤avik *
kurai mā kaṭalaik kaṭaintiṭṭu * ŏrukāl
niṉṟu uṇṭai kŏṇṭu oṭṭi vaṉ kūṉ nimira *
niṉainta pĕrumāṉ atu aṉṟiyum muṉ **
naṉṟu uṇṭa tŏl cīr makarak kaṭal ezh malai ezh *
ulaku ezh ŏzhiyāmai nampi *
aṉṟu uṇṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-2

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1899. The lord who churned the sounding milky ocean using Mandara mountain for a churning stick shot with a sling at the Kuni’s back, making it bend, and then shot again and straightened it. He swallowed the ancient seven worlds, the seven mountains and the seven oceans where fish swim and kept them in his stomach. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று ஒன்று ஒப்பற்ற மந்திர மலையை; மத்தா மத்தாக கொண்டு; அரவம் வாஸுகியென்னும் நாகத்தை; அளவி கயிறாகச் சுற்றி; குரை மா கடலை ஒலிக்கின்ற பெருங்கடலை; கடைந்திட்டு கடைந்தவனும்; ஒருகால் வேறு ஒரு சமயம்; உண்டை கொண்டு வில்லின் உண்டைகளைக் கொண்டு; வன் கூன் வலிதான மந்தரையின் கூனை; ஓட்டி நின்று நிமிர போக்கி நிமிரும்படி; நினைந்த பெருமான் செய்ய நினைத்த பெருமானும்; முன் அது அன்றியும் மற்றொரு சமயம்; தொல் சீர் பிரளய காலத்தில்; மகர முதலைகளையுடைய; உலகு ஏழ் உலகங்கள் ஏழையும்; கடல் ஏழ் கடல்கள் ஏழையும்; மலை ஏழ் மலைகள் ஏழையும்; ஒழியாமை ஒன்றோடொன்று சேர்ந்துவிடாதபடி; நம்பி நன்று உண்ட உண்டு காத்த பெருமானையும்; காண்மின் காண்மின்; அன்று உண்டவன் அன்று உண்டவன்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.3

1900 உளைந்திட்டெழுந்தமதுகைடவர்கள்
உலப்பில்வலியாரவர்பால் * வயிரம்
விளைந்திட்டதென்றெண்ணிவிண்ணோர்பரவ
அவர்நாளொழித்தபெருமான், முனநாள் *
வளைந்திட்டவில்லாளிவல்வாளெயிற்று
மலைபோல்அவுணனுடல் வள்ளுகிரால் *
அளைந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1900 உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் *
உலப்பு இல் வலியார் அவர்பால் * வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ *
அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் **
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று *
மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் *
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 3
1900 ul̤aintiṭṭu ĕzhunta matu-kaiṭavarkal̤ *
ulappu il valiyār-avarpāl * vayiram
vil̤aintiṭṭatu ĕṉṟu ĕṇṇi viṇṇor parava *
avar nāl̤ ŏzhitta pĕrumāṉ muṉa nāl̤ **
val̤aintiṭṭa villāl̤i val vāl̤ ĕyiṟṟu *
malai pol avuṇaṉ uṭal val̤ ukirāl *
al̤aintiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-3

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1900. When the gods in the sky were worried that the Asuran Madhukaitabha had become a terrible enemy and that he would fight them, they went to the god who carries a bent bow, worshiped him and asked for his help and our dear lord destroyed the Asuran and saved them. With his sharp claws he split open the mountain-like body of the Asuran Hiranyan with sword-like teeth. See, now he has stolen the butter and the cowherd women have caught and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலப்பு இல் அளவில்லாத; வலியால் வலிமையோடு; எழுந்த எழுந்த; மது கைடவர்கள் மது கைடபர்கள்; அவர் பால் என்னும் அசுரர்களோடு; வயிரம் பகைமை; விளைந்திட்டது ஏற்பட்டுவிட்டது; என்று எண்ணி என்று எண்ணி; உளைந்திட்டு அஞ்சி நடுங்கி; விண்ணோர் பரவ தேவர்கள் துதிக்க; அவர் அந்த அசுரர்களின்; நாள் ஒழித்த ஆயுளை முடித்த; பெருமான் பெருமானும்; முன நாள் வேறு ஒரு சமயம்; வளைந்திட்ட வளைந்தவில்லையுடைய; வில்லாளி வில்லாளியும்; வல் வாள் வலிமையுடைய ஒளியுள்ள; எயிற்று பற்களையுடையவனும்; மலை போல் மலை போன்றவனுமான; அவுணன் இரணியனின்; உடல் உடலை; வள் உகிரா கூர்மையான நகங்களினால்; அளைந்திட்டவன் கிழித்தவனுமான பெருமானை; காண்மின் காண்மின்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.4

1901 தளர்ந்திட்டுஇமையோர்சரண்தாவெனத்
தான்சரணாய், முரணாயவனை * உகிரால்
பிளந்திட்டுஅமரர்க்கருள்செய்துகந்த
பெருமான்திருமால், விரிநீருலகை *
வளர்ந்திட்டதொல்சீர்விறல்மாவலியை
மண்கொள்ளவஞ்சித்துஒருமாண்குறளாய் *
அளந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1901 தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் *
தான் சரண் ஆய் முரண் ஆயவனை * உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த *
பெருமான் திருமால் விரி நீர் உலகை **
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை *
மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் *
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 4
1901 tal̤arntiṭṭu imaiyor caraṇ tā ĕṉat *
tāṉ caraṇ āy muraṇ āyavaṉai * ukirāl
pil̤antiṭṭu amararkku arul̤cĕytu ukanta *
pĕrumāṉ tirumāl viri nīr ulakai **
val̤arntiṭṭa tŏl cīr viṟal māvaliyai *
maṇ kŏl̤l̤a vañcittu ŏru māṇ kuṟal̤ āy *
al̤antiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-4

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1901. When the gods in the sky grew tired fighting with their enemy Hiranyan and went to the god and asked him for refuge, our god Thirumāl split open the chest of Hiranyan and joyfully gave his grace to the gods in the sky. He went as a dwarf to the famous heroic king Mahābali, cheated him, took his land and measured the earth and the sky with his two feet. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் தேவர்கள்; தளர்ந்திட்டு அஸுரர்களால் துன்பப்படுத்தப்பட்ட எங்களுக்கு; சரண் தா ரக்ஷகனாக வேண்டும் என்று கூற; என தான் சரண் ஆய் தான் ரக்ஷகனாக நின்று; முரணாயவனை பெரு மிடுக்கனான இரணியனை; உகிரால் பிளந்திட்டு நகங்களாலே பிளந்து; அமரர்க்கு அருள் தேவர்களுக்கு அருள்; செய்து உகந்த செய்து உகந்த; பெருமான் திருமால் பெருமான் திருமால்; வளர்ந்திட்ட மேன்மேலும் வளரும்; தொல் சீர் மிகுந்த செல்வத்தையுடைய; விறல் மா வலியை பலிஷ்டனான மஹாபலியின்; மண் கொள்ள பூமியைக் கொள்ள; ஒரு மாண் ஒப்பற்ற பிரம்மசாரி; குறள் ஆய் வாமனனாய் வந்து; விரி நீர் உலகை கடல் சூழ்ந்த உலகங்களை; வஞ்சித்து வஞ்சித்து; அளந்திட்டவன் அளந்த பெருமானை; காண்மின் இன்று காண்மின் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.5

1902 நீண்டான்குறளாய்நெடுவானளவும்
அடியார்படும்ஆழ்துயராயவெல்லாம் *
தீண்டாமைநினைந்துஇமையோரளவும்
செலவைத்தபிரான், அதுவன்றியும்முன் *
வேண்டாமைநமன்தமர்என்தமரை
வினவப்பெறுவாரலரென்று * உலகேழ்
ஆண்டானவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1902 நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும் *
அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் *
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் *
செல வைத்த பிரான் அது அன்றியும் முன் **
வேண்டாமை நமன் தமர் என் தமரை *
வினவப் பெறுவார் அலர் என்று * உலகு ஏழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 5
1902 nīṇṭāṉ kuṟal̤ āy nĕṭu vāṉ al̤avum *
aṭiyār paṭum āzh tuyar āya ĕllām *
tīṇṭāmai niṉaintu imaiyor al̤avum *
cĕla vaitta pirāṉ atu aṉṟiyum muṉ **
veṇṭāmai namaṉ-tamar ĕṉ tamarai *
viṉavap pĕṟuvār alar ĕṉṟu * ulaku ezh
āṇṭāṉ-avaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-5

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1902. Wishing to remove the troubles of the gods, he went as a dwarf to Mahābali’s sacrifice, grew tall and measured the earth and the sky. He, the ruler of all the seven worlds, gives his grace to his devotees and protects them so that the messengers of Yama will not approach them. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறள் ஆய் வாமனனாக வந்து; நெடு வான் அளவும் பரந்த ஆகாசமெங்கும்; நீண்டான் வளர்ந்தவனாய்; அடியார் படும் பக்தர்கள் அநுபவிக்கும்; ஆழ் துயராய எல்லாம் கொடிய துயரங்களை; தீண்டாமை நினைந்து போக்க நினைத்து; இமையோர் அளவும் நித்யஸூரிகளளவும்; செல செல்லும்படியாக திருவடிகளை; வைத்த வைத்தருளின; பிரான் பெருமானை உபகாரகனை; அது அன்றியும் முன் அது அன்றியும் முன்பு; நமன் தமர் யமபடர்கள்; என் தமரை எம் அடியார்களை; வேண்டாமை வேண்டாதவர்கள் என்பதால்; வினவப் பெறுவார் ஆராயக்கடவர் அல்லர்; அலர் என்று துன்புறுத்தக் கூடாது என்று; உலகு ஏழ் ஏழு உலகங்களையும்; ஆண்டான் அவன் அவன் தானே ஆள்கிறான்; காண்மின் இன்று பாருங்கள் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.6

1903 பழித்திட்டஇன்பப்பயன்பற்றறுத்துப்
பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *
ஒழித்திட்டுஅவரைத்தனக்காக்கவல்ல
பெருமான்திருமால், அதுவன்றியும்முன் *
தெழித்திட்டெழுந்தேஎதிர்நின்றமன்னன்
சினத்தோளவையாயிரமும் * மழுவால்
அழித்திட்டவன்காண்மின்இன்று ஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1903 பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப் *
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் *
ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல *
பெருமான் திருமால் அது அன்றியும் முன் **
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் *
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் *
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 6
1903 pazhittiṭṭa iṉpap payaṉ paṟṟu aṟuttup *
paṇintu etta vallār tuyar āya ĕllām *
ŏzhittiṭṭu avarait taṉakku ākkavalla *
pĕrumāṉ tirumāl atu aṉṟiyum muṉ **
tĕzhittiṭṭu ĕzhunte ĕtir niṉṟa maṉṉaṉ *
ciṉattol̤-avai āyiramum mazhuvāl *
azhittiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-6

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1903. Our divine lord Thirumāl, who protects his devotees and removes the desires of evil passions for them if they worship him, cut off with his mazhu weapon the thousand arms of the angry Asuran Kārtaviryan when he came to fight with him. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move.(Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பழித்திட்ட சாஸ்திரங்களால் தள்ளப்பட்ட; இன்பப் பயன் சிற்றின்பப் பலன்களை; பற்று அறுத்து வேரோடு அறுத்து; பணிந்து திருவடிகளிலே விழுந்து; ஏத்த வல்லார் வணங்கும் பக்தர்களின்; துயர் ஆய எல்லாம் துன்பங்களை எல்லாம்; ஒழித்திட்டு போக்கி; அவரைத் அவர்களைத்; தனக்கு தன் தொண்டர்களாக; ஆக்கவல்ல செய்து கொள்ளவல்ல; பெருமான் திருமால் பெருமான் திருமாலை; அது அன்றியும் முன் அது அன்றியும் முன்பு; தெழித்திட்டு எழுந்தே பெரிய ஆரவாரத்தோடு; எதிர் நின்ற எதிரி என்று வந்து எதிர் நின்ற; மன்னன் கார்தவீரியார்ஜுனன் என்ற அரசனின்; சினத்தோள் அவை சினம் கொண்ட துடியா நின்றுள்ள; ஆயிரமும் ஆயிரம் தோள்களையும்; மழுவால் பரசு என்னும் மழுவால்; அழித்திட்டவன் அழித்தவனை; காண்மின் இன்று பாருங்கள் இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.7

1904 படைத்திட்டதுஇவ்வையம்உய்யமுனநாள்
பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *
துடைத்திட்டுஅவரைத்தனக்காக்கவென்னத்
தெளியாஅரக்கர்திறல்போயவிய *
மிடைத்திட்டெழுந்தகுரங்கைப்படையா
விலங்கல்புகப்பாய்ச்சிவிம்ம * கடலை
அடைத்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1904 படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள் *
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் *
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத் *
தெளியா அரக்கர் திறல் போய் அவிய **
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா *
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம * கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 7
1904 paṭaittiṭṭu atu iv vaiyam uyya muṉa nāl̤ *
paṇintu etta vallār tuyar āya ĕllām *
tuṭaittiṭṭu avarait taṉakku ākka ĕṉṉat *
tĕl̤iyā arakkar tiṟal poy aviya **
miṭaittiṭṭu ĕzhunta kuraṅkaip paṭaiyā *
vilaṅkal pukap pāycci vimma * kaṭalai
aṭaittiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-7

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1904. Our lord, the creator of the world who removes the sorrows of his devotees if they worship him gathered a monkey army, built a bridge over the ocean with stones, crossed it and destroyed his enemies in Lankā because the Rakshasās did not understand his strength. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாள் முன்பு பிரளய காலத்தில்; இவ்வையம் இவ்வுலகங்களை; படைத்திட்டு படைத்து; அது உய்ய அது உய்ய; பணிந்து விழுந்து வணங்கி; ஏத்த வல்லார் துதிக்கும் பக்தர்களின்; துயர் ஆய துயரங்களை; எல்லாம் எல்லாம்; துடைத்திட்டு துடைத்து போக்கி; அவரைத் அவர்களை; தனக்கு தன் தொண்டர்களாக; ஆக்க ஆக்கிக் கொள்ள; என்ன நினைத்தவனை; தெளியா இதை அறியாத; அரக்கர் திறல் அரக்கர்களின் மிடுக்கு; போய் அவிய அழியும்படி; மிடைத்திட்டு எழுந்த திரண்டு எழுந்த; குரங்கைப் வானர வீரர்களை; படையா படையாகக் கொண்டு; விம்ம கடலை கடல் நிறையும்படி; விலங்கல் புக மலைகளை; பாய்ச்சி பரப்பி கடலை; அடைத்திட்டவன் தூர்த்தவனான; காண்மின் பெருமானை பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.8

1905 நெறித்திட்டமென்கூழைநல்நேரிழையோடு
உடனாயவில்லென்னவல்லேயதனை *
இறுத்திட்டுஅவளின்பம்அன்போடணைந்திட்டு
இளங்கொற்றவனாய், துளங்காதமுந்நீர் *
செறித்திட்டுஇலங்கைமலங்க அரக்கன்
செழுநீள்முடிதோளொடுதாள்துணிய *
அறுத்திட்டவன்காண்மின் இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1905 நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு *
உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை *
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு *
இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர் **
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் *
செழு நீள் முடி தோளொடு தாள் துணிய *
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 8
1905 nĕṟittiṭṭa mĕṉ kūzhai nal ner-izhaiyoṭu *
uṭaṉ āya vil ĕṉṉa val ey ataṉai *
iṟuttiṭṭu aval̤ iṉpam aṉpoṭu aṇaintiṭṭu *
il̤aṅ kŏṟṟavaṉ āy tul̤aṅkāta munnīr **
cĕṟittiṭṭu ilaṅkai malaṅka arakkaṉ *
cĕzhu nīl̤ muṭi tol̤ŏṭu tāl̤ tuṇiya *
aṟuttiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-8

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1905. As Rāma, the lord broke the bow that was born with Sita, and he married her who had precious ornaments and curly soft hair. When he was living happily with her as a prince, she was abducted by Rāvana, the king of Lankā. He built a bridge, crossed the ocean, fought with Rāvana, cut off his ten strong heads and his arms and legs and brought his wife back. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெறித்திட்ட அடர்ந்த; மென் மென்மையான; கூழை கூந்தலையும்; நல் நேர் அழகிய; இழையோடு ஆபரணங்களை உடைய; உடன் ஆய ஸீதையோடு உடன் பிறந்த; வில் என்ன வில் என்ன; வல் ஏய் மிடுக்கான; அதனை அந்த வில்லை; இறுத்திட்டு முறித்துவிட்டு; அவள் அவளுடன் கூடி; இன்பம் இன்பம் அடைந்து; அன்போடு அன்போடு அவளை; அணைந்திட்டு அணைத்த; இளம் இளைய; கொற்றவன் ஆய் யுவராஜாவாய் இருந்தவனை; துளங்காத ஒருவராலும் அசைக்க முடியாத; முந்நீர் செறித்திட்டு கடலில் அணைகட்டி; இலங்கை மலங்க இலங்கை கலங்க; அரக்கன் இராவணனின்; செழு நீள் செழித்த நீண்ட; முடி தலைகளையும்; தோளொடு தோள்களோடு; தாள் துணிய தாள்களையும் துணிய; அறுத்திட்டவன் அறுத்திட்ட பெருமானை; காண்மின் பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.9

1906 சுரிந்திட்டசெங்கேழுளைப்பொங்கரிமாத்
தொலையப் பிரியாதுசென்றெய்தி * எய்தாது
இரிந்திட்டிடங்கொண்டடங்காததன்வாய்
இருகூறுசெய்தபெருமான், முனநாள் *
வரிந்திட்டவில்லால்மரமேழுமெய்து
மலைபோலுருவத்துஓரிராக்கதிமூக்கு *
அரிந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1906 சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமாத் *
தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது *
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் *
இரு கூறு செய்த பெருமான் முன நாள் **
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து *
மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு *
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 9
1906 curintiṭṭa cĕṅ kezh ul̤aip pŏṅku arimāt *
tŏlaiyap piriyātu cĕṉṟu ĕyti ĕytātu *
irintiṭṭu iṭaṅkŏṇṭu aṭaṅkātataṉ vāy *
iru kūṟu cĕyta pĕrumāṉ muṉa nāl̤ **
varintiṭṭa villāl maram ezhum ĕytu *
malaipol uruvattu or irākkati mūkku *
arintiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-9

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1906. When the Asuran Kesi came as a tawny horse, he split open his mouth and killed him, he broke the seven marā trees with his strong bow and he cut off the nose and ears of the Raksasi Surpanakha who was as large as a mountain. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுரிந்திட்ட இருண்டிருக்கும்; செங் கேழ் உளை சிவந்த பிடரி முடியையுடைய; பொங்கு களித்து வரும்; அரிமா கேசி என்னும் குதிரை; தொலைய தொலைய; பிரியாது அதை விடாமல்; சென்று எய்தி மடக்கி சென்று; எய்தாது கிட்டவர விடாமல்; இரிந்திட்டு திரிந்து; இடங்கொண்டு இடம் கொடுக்காமல்; அடங்காததன் அடங்காத குதிரையின்; வாய் வாயை; இரு கூறு செய்த இரு கூறாக பிளந்த; பெருமான் பெருமான்; முன நாள் முன்பு ஒரு சமயம் ராமன்; வரிந்திட்ட வில்லால் கட்டுடைய வில்லால்; மரம் ஏழும் ஏழு மராமரங்களை; எய்து துளைத்த பெருமானை; மலைபோல் மலைபோன்ற; உருவத்து வடிவையுடைய; ஓர் இராக்கதி ஓரு ராக்ஷஸி சூர்ப்பணகையின்; மூக்கு அரிந்திட்டவன் மூக்கை அரிந்திட்டவனை; காண்மின் பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

PT 10.6.10

1907 நின்றார்முகப்புச்சிறிதும்நினையான்
வயிற்றைநிறைப்பானுறிப்பால்தயிர்நெய் *
அன்றுஆய்ச்சியர்வெண்ணெய்விழுங்கிஉரலோடு
ஆப்புண்டிருந்தபெருமானடிமேல் *
நன்றாயதொல்சீர்வயல்மங்கையர்கோன்
கலியனொலிசெய்தமிழ்மாலைவல்லார் *
என்றானும்எய்தார்இடர் இன்பமெய்தி
இமையோர்க்குமப்பால்செலவெய்துவாரே. (2)
1907 ## நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் *
வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் *
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி * உரலோடு
ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல் **
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன் *
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி *
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே 10
1907 ## niṉṟār mukappuc ciṟitum niṉaiyāṉ *
vayiṟṟai niṟaippāṉ uṟip pāl tayir nĕy *
aṉṟu āycciyar vĕṇṇĕy vizhuṅki * uraloṭu
āppuṇṭirunta pĕrumāṉ aṭimel **
naṉṟu āya tŏl cīr vayal maṅkaiyar-koṉ *
kaliyaṉ ŏlicĕy tamizh-mālai vallār *
ĕṉṟāṉum ĕytār iṭar iṉpam ĕyti *
imaiyorkkum appāl cĕla ĕytuvāre-10

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1907. Kaliyan, the chief of ancient Thirumangai surrounded with flourishing fields, composed a garland of Tamil pāsurams worshiping the feet of the lord and describing his deeds, how he was tied to a mortar by the cowherd women when he stole milk, yogurt and ghee from the uri, swallowed them and filled his stomach, and how even when the cowherd women saw him, he was not worried and did not feel shy. If devotees learn and recite these pāsurams they will have no troubles in their lives and will find happiness. They will reach the the spiritual world that is above even the world of the gods. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்றார் முகப்பு எதிரே நின்றவர்களைப் பார்த்து; சிறிதும் நினையான் சிறிதும் வெட்கப்படாமல்; வயிற்றை நிறைப்பான் வயிற்றை நிறைக்க; உறிப் உறிகளிலே இருந்த; பால் தயிர் நெய் பால் தயிர் நெய்; வெண்ணெய் வெண்ணெய் ஆகியவற்றை; விழுங்கி களவாடி விழுங்கி; அன்று ஆய்ச்சியர் அன்று ஆய்ச்சியர்களால்; உரலோடு உரலோடு; ஆப்புண்டிருந்த கட்டுண்டிருந்த கண்ணனின்; பெருமான் அடிமேல் திருவடிகளைக் குறித்து; நன்று ஆய தொல் சீர் மிகுந்த செல்வமுடைய; வயல் வயல்களால் சூழ்ந்த; மங்கையர் கோன் திருமங்கை மன்னனான; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் கற்க வல்லார்; என்றானும் இடர் ஒரு நாளும் துன்பம்; எய்தார் அடையமாட்டார்கள்; இன்பம் எய்தி இன்பம் பெற்று; இமையோர்க்கும் தேவர்களுக்கும் கிட்டாத; அப்பால் செல பரமபதத்தை; எய்துவாரே அடைவார்கள்