Was it the One Who Swallowed the Worlds Who Remained Bound?
உலகம் உண்டவனா கட்டுண்டிருந்தவன்!
1899 குன்றொன்றுமத்தாஅரவமளவிக்
குரைமாகடலைக்கடைந்திட்டு * ஒருகால்
நின்றுஉண்டைகொண்டோட்டிவன்கூன்நிமிர
நினைத்தபெருமான், அதுவன்றியும்முன் *
நன்றுண்டதொல்சீர்மகரக்கடலேழ்
மலையேழ்உலகேழ்ஒழியாமைநம்பி *
அன்றுண்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.