Your browser does not support the audio element.
audio
1888 பூங்கோதையாய்ச்சி கடைவெண்ணெய்புக்குண்ண *
ஆங்கவள் ஆர்த்துப்புடைக்கப் புடையுண்டு *
ஏங்கியிருந்து சிணுங்கிவிளையாடும் *
ஓங்கோதவண்ணனே! சப்பாணி ஒளிமணிவண்ணனே! சப்பாணி. (2)
1889 தாயர்மனங்கள்தடிப்பத் தயிர்நெய்யுண்
டேஎம்பிராக்கள் * இருநிலத்துஎங்கள்தம் *
ஆயரழக அடிகள் * அரவிந்த
வாயவனே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1890 தாம்மோருருட்டித் தயிர்நெய்விழுங்கிட்டு *
தாமோதவழ்வரென்று ஆய்ச்சியர்தாம்பினால் *
தாமோதரக்கையால் ஆர்க்கத்தழும்பிருந்த *
தாமோதரா! கொட்டாய்சப்பாணி தாமரைக்கண்ணனே! சப்பாணி.
1891 பெற்றார்தளைகழலப் பேர்ந்தங்கயலிடத்து *
உற்றாரொருவரும்இன்றி உலகினில் *
மற்றாரும்அஞ்சப்போய் வஞ்சப்பெண்நஞ்சுண்ட *
கற்றாயனே! கொட்டாய்சப்பாணி கார்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1892 சோத்தெனநின்னைத் தொழுவன்வரந்தர *
பேய்ச்சிமுலையுண்டபிள்ளாய்! * பெரியன
ஆய்ச்சியர் அப்பம்தருவர் * அவர்க்காகச்
சாற்றியோராயிரம்சப்பாணி தடங்கைகளால்கொட்டாய் சப்பாணி.
1893 கேவலமன்று உன்வயிறு * வயிற்றுக்கு
நானவலவப்பம்தருவன் * கருவிளைப்
பூவலர்நீள்முடி நந்தன்தன்போரேறே! *
கோவலனே! கொட்டாய்சப்பாணி குடமாடீ! கொட்டாய்சப்பாணி.
1894 புள்ளினைவாய்பிளந்து பூங்குருந்தம்சாய்த்து *
துள்ளிவிளயாடித் தூங்குறிவெண்ணெயை *
அள்ளியகையால் அடியேன்முலைநெருடும் *
பிள்ளைப்பிரான்! கொட்டாய்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
1895 யாயும்பிறரும் அறியாதயாமத்து *
மாயவலவைப்பெண் வந்துமுலைதர *
பேயென்றுஅவளைப் பிடித்துஉயிரையுண்ட *
1896 கள்ளக்குழவியாய்க் காலால்சகடத்தை *
தள்ளியுதைத்திட்டுத் தாயாய்வருவாளை *
மெள்ளத்தொடர்ந்து பிடித்துஆருயிருண்ட *
வள்ளலே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1897 காரார்புயல்கைக்கலிகன்றி மங்கையர்கோன் *
பேராளன்நெஞ்சில் பிரியாதுஇடங்கொண்ட
சீராளா! * செந்தாமரைக்கண்ணா! தண்துழாய்த்
தாராளா! * கொட்டாய்சப்பாணி தடமார்வா! கொட்டாய்சப்பாணி. (2)