Was it He Who Pierced the Seven Marāmara Trees Who Remained Bound?
ஏழு மராமரங்களை எய்தவனா கட்டுண்டிருந்தவன்!
1906 சுரிந்திட்டசெங்கேழுளைப்பொங்கரிமாத்
தொலையப் பிரியாதுசென்றெய்தி * எய்தாது
இரிந்திட்டிடங்கொண்டடங்காததன்வாய்
இருகூறுசெய்தபெருமான், முனநாள் *
வரிந்திட்டவில்லால்மரமேழுமெய்து
மலைபோலுருவத்துஓரிராக்கதிமூக்கு *
அரிந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.