Your browser does not support the audio element.
audio
998 வாணிலாமுறுவல்சிறுநுதல்பெருந்தோள்
மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன் * அதனைப்பிழையெனக்கருதிப்
பேதையேன்பிறவிநோயறுப்பான் *
ஏணிலேன்இருந்தேன்எண்ணினேன்எண்ணி
இளையவர்கலவியின்திறத்தை
நாணினேன் * வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்! (2)
999 சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார்
திறத்தனாய் அறத்தையேமறந்து *
புலம்படிந்துண்ணும்போகமேபெருக்கிப்
போக்கினேன் பொழுதினைவாளா *
அலம்புரிதடக்கைஆயனே! மாயா!
வானவர்க்கரசனே! * வானோர்
நலம்புரிந்திறைஞ்சும்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து
சுரிகுழல்மடந்தையர்த்திறத்து *
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்த
தொண்டனேன், நமன்தமர்செய்யும் *
வேதனைக்குஒடுங்கிநடுங்கினேன்
வேலைவெண்திரையலமரக்கடைந்த *
நாதனே! வந்துஉன்திருவடியடைந்தேன்
1001 வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து
பிறர்பொருள்தாரமென்றிவற்றை *
நம்பினாரிறந்தால்நமன்தமர்பற்றி
எற்றிவைத்து, எரியெழுகின்ற *
செம்பினாலியன்றபாவையைப்
பாவீ * தழுவெனமொழிவதற்க்கு அஞ்சி *
நம்பனே! வந்து உன் திருவடியடைந்தேன்
1002 இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு
இரந்தவர்க்கில்லையேயென்று *
நெடுஞ்சொலால்மறுத்தநீசனேன்அந்தோ!
நினைக்கிலேன்வினைப்பயன்தன்னை *
கடுஞ்சொலார்கடியார்காலனார்தமரால்
படுவதோர்கொடுமிறைக்குஅஞ்சி *
நடுங்கிநான்வந்துஉன்திருவடியடைந்தேன்
1003 கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து
திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு *
ஓடியும்உழன்றும்உயிர்களேகொன்றேன்
உணர்விலேனாதலால் * நமனார்
பாடியைப்பெரிதும்பரிசழித்திட்டேன்
பரமனே! பாற்கடல்கிடந்தாய்! *
நாடிநான்வந்துஉன்திருவடியடைந்தேன்
1004 நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும்
நீதியல்லாதனசெய்தும் *
துஞ்சினார்செல்லுந்தொன்நெறிகேட்டே
துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்! *
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்பிரியா
வானவா! தானவர்க்கு என்றும்
நஞ்சனே! * வந்துஉன்திருவடியடைந்தேன்
1005 ஏவினார்கலியார்நலிகவென்று என்மேல்
எங்ஙனேவாழுமாறு? * ஐவர்
கோவினார் செய்யும்கொடுமையைமடித்தேன்
குறுங்குடிநெடுங்கடல்வண்ணா! *
பாவினாரின்சொல் பன்மலர்கொண்டு உன்
பாதமேபரவிநான் பணிந்து * என்
நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்
1006 ஊனிடைச்சுவர்வைத்துஎன்புதூண்நாட்டி
உரோமம்வேய்ந்துஒன்பதுவாசல் *
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்தன்
சரணமேசரணமென்றிருந்தேன் *
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே!
திரைகொள்மாநெடுங்கடல்கிடந்தாய்! *
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன்
1007 ஏதம்வந்தணுகாவண்ணம்நாம்எண்ணி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்
தெந்தையைச்சிந்தையுள் வைத்து *
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய்
மாலைதான் கற்றுவல்லார்கள் *
ஓதநீர்வையகம்ஆண்டுவெண்குடைக்கீழ்
உம்பருமாகுவர்தாமே. (2)