Your browser does not support the audio element.
audio
988 கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய் *
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச் செருக்களத்து *
மலைகொண்டுஅலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கை வாளரக்கர்
தலைவன் * தலைபத்துஅறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே! (2)
989 கடம்சூழ்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும் *
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கைபொடியாவடிவாய்ச்சரம்துரந்தான் *
இடம்சூழ்ந்துஎங்கும் இருவிசும்பில் இமையோர்வணங்க மணம்கமழும் *
தடம்சூழ்ந்துஎங்கும் அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும் *
நிலவும்சுடரும்இருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன் * வானோர்தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் * சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
991 ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய *
தேரா அரக்கர்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான் * பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டு அறைகின்ற
தாரான் * தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே!
992 அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கு அயில்வாளால்
விடுத்தான் * விளங்குசுடராழி விண்ணோர்பெருமான் நண்ணார்முன் *
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தி இனநிரைக்காத்
தடுத்தான் * தடம்சூழ்ந்துஅழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்இழுதும்உடனுண்ட
வாயான் * தூயஅரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலியை
ஏயானிரப்ப * மூவடிமண்இன்றேதாவென்று உலகேழும்
தாயான் * காயாமலர்வண்ணன் சாளக்கிராமம் அடைநெஞ்சே!
994 ஏனோர் அஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியஇரணியனை *
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன் தானேஇருசுடராய் *
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாய்அலைநீருலகனைத்தும்
தானாய் * தானுமானாந்தன் சாளக்கிராமம்அடை நெஞ்சே!
995 வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசி, கையகத்து * ஓர்
சந்தார்தலைகொண்டு உலகேழும்திரியும்பெரியோந்தான் சென்று * என்
எந்தாய்! சாபம்தீரென்ன இலங்குஅமுதநீர்திருமார்பில்
தந்தான் * சந்தார்பொழில்சூழ்ந்தசாளக்கிராமம் அடைநெஞ்சே!
996 தொண்டாமினமும்இமையோரும் துணைநூல் மார்பினந்தணரும் *
அண்டா! எமக்கேயருளாயென்று அணையும்கோயிலருகெல்லாம் *
வண்டார்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய *
தண்தாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமம் அடைநெஞ்சே!
997 தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்துஅடிகளை *
காரார்புறவின்மங்கைவேந்தன் கலியன்ஒலிசெய் தமிழ்மாலை *
ஆரார்உலகத்தறிவுடையார் அமரர்நல்நாட்டரசாள *
பேராயிரமும்ஓதுமின்கள் அன்றிஇவையே பிதற்றுமினே. (2)