Your browser does not support the audio element.
audio
412 மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ *
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்
துலகாண்டதிருமால்கோயில் *
திருவடிதன்திருவுருவும் திருமங்கை
மலர்கண்ணும்காட்டிநின்று *
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட
ஓசலிக்கும்ஒளியரங்கமே. (2)
413 தன்னடியார்திறத்தகத்துத் தாமரை
யாளாகிலும்சிதகுரைக்குமேல் *
என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தாரென்பர்போலும் *
மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்
திசைநோக்கிமலர்கண்வைத்த *
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே (2)
414 கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் *
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான் *
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி *
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
415 பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய * துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில் *
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான் *
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.
416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா
யவனியாய்அருவரைகளாய் *
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த்தானுமானான் *
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.
417 மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி *
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில் *
பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும்பரந்தநாடும் *
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
418 குறட்பிரமசாரியாய் மாவலியைக்
குறும்பதக்கிஅரசுவாங்கி *
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில் *
எறிப்புடையமணிவரைமேல் இளஞாயி
றெழுந்தாற்போல்அரவணையின்வாய் *
சிறப்புடையபணங்கள்மிசைச்
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே.
419 உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி *
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில் *
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட *
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.
420 தேவுடையமீனமாய்ஆமையாய்
ஏனமாய் அரியாய்க்குறளாய் *
மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய்முடிப்பான்கோயில் *
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி *
பூவணைமேல்துதைந்தெழு செம்
பொடியாடிவிளையாடும்புனலரங்கமே.
421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் * மறையாளன்ஓடாத
படையாளன் விழுக்கையாளன் *
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன் *
திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்றதிருவரங்கமே. (2)
422 கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்
படையுடையான்கருதும்கோயில் *
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல் *
மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்
விரித்ததமிழுரைக்கவல்லார் *
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே. (2)