PAT 4.3.9

விமலன் வாழும்மலை திருமாலிருஞ்சோலை மலை

357 கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து *
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை *
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று *
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே.
357 koṭṭumaṇ kŏṇṭu * iṭantu kuṭaṅkaiyil maṇ kŏṇṭu al̤antu *
mīṭṭum atu uṇṭu umizhntu * vil̤aiyāṭum vimalaṉ malai **
īṭṭiya pal pŏrul̤kal̤ * ĕmpirāṉukku aṭiyuṟai ĕṉṟu *
oṭṭarum taṇ cilampāṟu uṭai * māliruñ colaiyate (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

357. The mountain of the faultless lord who as a boar playfully dug up the earth with his tusk, measured the earth as Vāmanā and swallowed it as little Kannan is Thirumālirunjolai where the cool river Silambāru collects and brings many things and places them at the feet of the god as offerings to worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈட்டிய தான் திரட்டிய; பல் பொன் முத்து அகில் போன்ற பல; பொருள்கள் பொருள்கள்; எம்பிரானுக்கு எம் பெருமானுக்கு; அடியுறை என்று பாத காணிக்கையென்று; ஓட்டரும் தண் பெருகி ஓடுகின்ற குளிர்ந்த; சிலம்பு ஆறு உடை நூபுர கங்கையையுடைய மலை; மாலிருஞ் சோலையதே மாலிருஞ் சோலையதே; கோட்டு முற்பற்களால்; மண் பூமியை; கொண்டிடந்து தூக்கி எடுத்தவனும்; மண் மஹாபலி வசமாக்கிய பூமியை; குடங்கையில் உள்ளங்கையில்; கொண்டு வாங்கிக்கொண்டு; அளந்து அளந்தவனும்; மீட்டும் மறுபடியும்; அது உண்டு அந்த பூமியை உண்டிட்டு; உமிழ்ந்து விளையாடும் பின் உமிழ்ந்து விளையாடும்; விமலன் மலை நிர்மலமானவனின் மலை
māliruñ colaiyate it is Thirumalirunjolai; cilampu āṟu uṭai where silambaru (noopura ganga); īṭṭiya gathers; pŏrul̤kal̤ objects made of; pal gold, pearls, and gems; oṭṭarum taṇ and places them as offerings; aṭiyuṟai ĕṉṟu at the feet of; ĕmpirāṉukku the Lord; vimalaṉ malai its the mountain of Kannan who; koṭṭu with His front teeth (as a Boar); kŏṇṭiṭantu lifted; maṇ the earth; al̤antu who after measuring the earth; kŏṇṭu received; maṇ the land from Mahabali; kuṭaṅkaiyil it in His hand; mīṭṭum and later; atu uṇṭu swallowed it; umiḻntu vil̤aiyāṭum then spat it out/played