PAT 4.3.10

அனந்தசயனன் ஆளும்மலை திருமாலிருஞ்சோலை

358 ## ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக *
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை *
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் *
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2)
358 ## āyiram tol̤ parappi * muṭi āyiram miṉ ilaka *
āyiram paintalaiya * aṉanta cayaṉaṉ āl̤um malai **
āyiram āṟukal̤um * cuṉaikal̤ pala āyiramum *
āyiram pūm pŏzhilum uṭai * māliruñ colaiyate (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

358. The mountain of the faultless one who rests on Adishesha with a thousand shining crowns and a thousand arms is beautiful Thirumālirunjolai where there are a thousand rivers, a thousand springs and a thousand blooming groves, all ruled by the lord Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயிரம் ஆறுகளும் பல நதிகளும்; பல ஆயிரம் சுனைகள் பல ஆயிரம் சுனைகளும்; ஆயிரம் பூம் ஆயிரம் மலர்; பொழிலும் உடை சோலைகளையுடைய; மாலிருஞ் சோலையதே மாலிருஞ் சோலையதே; ஆயிரம் தோள் ஆயிரம் திருத்தோள்களை; பரப்பி பரப்பிக்கொண்டு; முடி ஆயிரம் ஆயிரந் திருமுடிகளும்; மின் இலக ஒளி விடவும்; ஆயிரம் ஆயிரம்; பைந்தலைய படங்கள் உடைய திருவனந்தாழ்வான் மீது; அனந்தசயனன் சயனித்திருக்கும் பிரான்; ஆளும் மலை ஆளுகின்ற மலை
māliruñ colaiyate it is Thirumalirunjolai; pŏḻilum uṭai that contains beautiful garden with; āyiram pūm blooming flowers; āyiram āṟukal̤um many rivers; pala āyiram cuṉaikal̤ and thousands of springs; āl̤um malai its the mountain reigned by; aṉantacayaṉaṉ the Lord who rests on; paintalaiya adi sesha with; āyiram thousand heads; muṭi āyiram He has thousands of crowns; miṉ ilaka that sparkles; āyiram tol̤ and has thousands of shoulders; parappi that spreads