PAT 4.3.8

தேவர்கள் பிரதட்சிணம் செய்யும் மலை

356 எரிசிதறும்சரத்தால் இலங்கையினை * தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த *
அரையனமரும்மலை அமரரோடுகோனும்சென்று *
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே.
356 ĕri citaṟum carattāl * ilaṅkaiyiṉait * taṉṉuṭaiya
vari cilai vāyil pĕytu * vāyk koṭṭam tavirttu ukanta **
araiyaṉ amarum malai * amararoṭu koṉum cĕṉṟu *
tiricuṭar cūzhum malai * tiru māliruñ colaiyate (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

356. Thirumāliruncholai is the mountain of Lord Rāma who destroyed Lankā with his fiery arrows, bending his bow heroically, This is a divine place where all the gods and Indra the king of gods go and worship Him and where the bright sun, moon and the stars surrounding it shine.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரரோடு தேவர்களோடு; கோனும் சென்று இந்திரனும் சென்று; திரி எப்போதும் திரிந்துகொண்டிருக்கும்; சுடர் சந்திரசூரியர்களும்; சூழும் மலை வந்து வலம் வருகிற மலையானது; திருமாலிருஞ் சோலையதே திருமாலிருஞ் சோலையதே; எரி சிதறும் நெருப்பை சிதறும்; சரத்தால் அம்புகளினால்; இலங்கையினை இலங்கை அதிபதியான ராவணனை; தன்னுடைய தன்னுடைய; வரிசிலை நீண்டிருக்கும் சார்ங்கத்தின்; வாயில் பெய்து வாயிலே புகச்செய்து; வாய்க் கோட்டம் அவனுடைய வாக்கின் செருக்கை; தவிர்த்து உகந்த குலைத்து மகிழ்ந்த; அரையன் இராமபிரான்; அமரும் மலை இருக்கும் மலை
tirumāliruñ colaiyate it is Thirumalirunjolai where; koṉum cĕṉṟu Indra goes; amararŏṭu along with other devas to worship; tiri amd the always revolving; cuṭar the moon and sun surrounds; cūḻum malai the mountain; amarum malai it is the mountain where; araiyaṉ resides Lord Rama who; ĕri citaṟum with His fiery; carattāl arrows; taṉṉuṭaiya sent from His; varicilai from a long bow (Sarangam); vāyil pĕytu made them enter the mouth of; ilaṅkaiyiṉai Ravana, the king of Lanka; tavirttu ukanta and destroyed; vāyk koṭṭam his arrogance