Chapter 3

Yashoda calls Kannan to come to pierce his ears - (போய்ப்பாடு உடைய)

காது குத்தல்
Yashoda calls Kannan to come to pierce his ears - (போய்ப்பாடு உடைய)

One of the actions of little children is showing insects. Similarly, Krishna is playing by showing an insect. The Gopis delight in the child's antics. The āzhvār, overwhelmed by devotion, experiences and enjoys this play as if witnessing it directly.

சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி காட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதுபோல் அனுபவித்து இன்பமடைகிறார்.

Verses: 139 to 151
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will always be devotees of Achudan
  • PAT 2.3.1
    139 ## போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் *
    பொரு திறல் கஞ்சன் கடியன் *
    காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னைத் *
    தனியே போய் எங்கும் திரிதி **
    பேய்ப்பால் முலை உண்ட பித்தனே *
    கேசவ நம்பீ உன்னைக் காது குத்த *
    ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் *
    அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (1)
  • PAT 2.3.2
    140 வண்ணப் பவள மருங்கினில் சாத்தி *
    மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப *
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத *
    நாராயணா இங்கே வாராய் **
    எண்ணற்கு அரிய பிரானே *
    திரியை எரியாமே காதுக்கு இடுவன் *
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய *
    கனகக் கடிப்பும் இவையா (2)
  • PAT 2.3.3
    141 வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும் *
    மகரக்குழை கொண்டுவைத்தேன் *
    வெய்யவே காதில் திரியை இடுவன் *
    நீ வேண்டிய தெல்லாம் தருவன் **
    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய *
    ஒண்சுடர் ஆயர்கொழுந்தே *
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து *
    மாதவனே இங்கே வாராய் (3)
  • PAT 2.3.4
    142 வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு *
    வார்காது தாழப் பெருக்கிக் *
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள் *
    கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் **
    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால் *
    இனிய பலாப்பழம் தந்து *
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் *
    சோத்தம் பிரான் இங்கே வாராய் (4)
  • PAT 2.3.5
    143 சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் *
    சுரிகுழலாரொடு நீ போய் *
    கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் *
    குணங்கொண்டு இடுவனோ? நம்பீ **
    பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் *
    பிரானே திரியிட ஒட்டில் *
    வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல் *
    விட்டுவே நீ இங்கே வாராய் (5)
  • PAT 2.3.6
    144 விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் *
    உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி *
    மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி *
    மதுசூதனே என்று இருந்தேன் **
    புண் ஏதும் இல்லை உன்காது மறியும் *
    பொறுத்து இறைப் போது இரு நம்பீ *
    கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா *
    காவலனே முலை உணாயே (6)
  • PAT 2.3.7
    145 முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி *
    நின்காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு *
    மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் *
    பசுநிரை மேய்த்தாய் **
    சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா *
    திரு ஆயர்பாடிப் பிரானே *
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே *
    விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)
  • PAT 2.3.8
    146 என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் *
    என்னை நான் மண் உண்டேனாக *
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் *
    அனைவர்க்கும் காட்டிற்றிலையே? **
    வன் புற்று அரவின் பகைக் கொடி * வாமன நம்பீ
    உன் காதுகள் தூரும் *
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே *
    திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8)
  • PAT 2.3.9
    147 மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித் *
    தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று *
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் *
    காணவே கட்டிற்றிலையே? **
    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் *
    சிரீதரா உன்காது தூரும் *
    கையில் திரியை இடுகிடாய் இந்நின்ற *
    காரிகையார் சிரியாமே (9)
  • PAT 2.3.10
    148 காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என் *
    காதுகள் வீங்கி எரியில்? *
    தாரியா தாகில் தலை நொந்திடும் என்று *
    விட்டிட்டேன் குற்றமே அன்றே? **
    சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது
    பெருக்கித் * திரியவும் காண்டி *
    ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட *
    இருடிகேசா என்தன் கண்ணே <10>
  • PAT 2.3.11
    149 கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் *
    கடிகமழ் பூங்குழலார்கள் *
    எண்ணத்துள் என்றும் இருந்து * தித்திக்கும்
    பெருமானே எங்கள் அமுதே **
    உண்ணக் கனிகள் தருவன் * கடிப்பு ஒன்றும்
    நோவாமே காதுக்கு இடுவன் *
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட *
    பற்பநாபா இங்கே வாராய் (11)
  • PAT 2.3.12
    150 வா என்று சொல்லி என்கையைப் பிடித்து *
    வலியவே காதில் கடிப்பை *
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்? *
    காதுகள் நொந்திடும் கில்லேன் **
    நாவல் பழம் கொண்டுவைத்தேன் *
    இவை ஆணாய் நம்பீ * முன் வஞ்ச மகளைச்
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட *
    தாமோதரா இங்கே வாராய் (12)
  • PAT 2.3.13
    151 ## வார் காது தாழப் பெருக்கி அமைத்து *
    மகரக்குழை இட வேண்டி *
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் *
    சிந்தையுள் நின்று திகழ **
    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன் *
    பன்னிரு நாமத்தால் சொன்ன *
    ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் *
    அச்சுதனுக்கு அடியாரே (13)