MUT 76

திருமாலையே தொழு: தீவினைகள் சேரா

2357 பொருப்பிடையேநின்றும் புனல்குளித்தும் * ஐந்து
நெருப்பிடையேநிற்கவும்நீர்வேண்டா * - விருப்புடைய
வெஃகாவேசேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க்கை தொழுதால் *
அஃகாவேதீவினைகளாய்ந்து.
2357 pŏruppiṭaiye niṉṟum * puṉal kul̤ittum * aintu
nĕruppiṭaiye niṟkavum nīr veṇṭā ** - viruppu uṭaiya
vĕḵkāve cerntāṉai * mĕym malar tūyk kai tŏzhutāl *
aḵkāve tīviṉaikal̤ āyntu. 76

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2357. You do not need to stand on a hill, plunge into water or stand near five sacrificial fires to reach him. If you sprinkle flowers, folding your hands, and lovingly worship the god of Thiruvekka, all your bad karmā will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் ஓ உலகத்தவர்களே!; பொருப்பிடையே மலைகளின் நடுவே; நின்றும் நின்றுகொண்டும்; புனல் நீர் நிலைகளில்; குளித்தும் மூழ்கிக்கொண்டும்; ஐந்து நெருப்பிடையே பஞ்சாக்னி நடுவே; நிற்கவும் நின்றும் தவம் செய்யவும்; வேண்டா வேண்டியதில்லை; விருப்பு உடைய அனைவரும் விரும்பும்; வெஃகாவே திருவெஃகாவில்; சேர்ந்தானை இருக்கும் பெருமானை; மெய் பயன் கருதாமல் உண்மையாக; மலர் தூய் அன்றலர்ந்த மலர் தூவி; கை அஞ்சலி செய்து; தொழுதால் வணங்கினால்; தீவினைகள் பாபங்களெல்லாம்; ஆய்ந்து நமக்கு இங்கு இடமில்லை என்று அறிந்து; அஃகாவே அகன்று ஓடிவிடும் அல்லவா?
nīr you all (ŏh people of the world!); poruppu idaiyĕ amidst the mountains; ninṛum standing; punal in the waterways; kul̤iththum immersing in them; aindhu neruppidaiyĕ amidst panchāgni (five fires); niṛkavum doing penance, standing; vĕṇdā there is no need; viruppu udaiya being desired (by all); vehkā at thiruvehkā (a divine abode in present day kānchīpuram); sĕrndhānai emperumān who has come there and is reclining; mey without expecting any benefit; malar thūy kai thozhudhāl if one offers flowers and worships; thī vinaigal̤ bad deeds (sins, results of such bad deeds); āyndhu analysing (that there is no place for us here) and knowing; ahkāvĕ won’t they shrink? (implies that they will run away)