MUT 75

கண்ணன் பயிலும் இடம் திருமலையே

2356 சார்ந்தகடுதேய்ப்பத் தடாவியகோட்டுச்சிவாய் *
ஊர்ந்தியங்கும்வெண்மதியினொண்முயலை * - சேர்ந்து
சினவேங்கைபார்க்கும் திருமலையே * ஆயன்
புனவேங்கைநாறும்பொருப்பு.
2356 cārntu akaṭu teyppat * taṭāviya koṭṭu uccivāy *
ūrntu iyaṅkum vĕṇ matiyiṉ ŏṇ muyalai ** - cerntu
ciṉa veṅkai pārkkum * tirumalaiye * āyaṉ
puṉa veṅkai nāṟum pŏruppu 75

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2356. In the divine Thiruvenkatam hills where the blossoms of vengai tree spread their fragrance, an angry tiger sees the rabbit in the floating white moon against the red color of the sky, thinks it is a real rabbit and becomes angry because it could not catch it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடாவிய பரந்த; கோட்டு மலைச்சிகரங்களின்; உச்சிவாய் உச்சியிலே; அகடு தேய்ப்ப கீழ் வயிறு உராயும்படி; சார்ந்து அணுகி; ஊர்ந்து மெல்ல; இயங்கும் ஸஞ்சரிக்கின்ற; வெண் வெளுத்த; மதியின் சந்திரனிடத்திலுள்ள; ஒண் முயலை அழகிய முயலை; சின கோபத்தையுடைய; வேங்கை வேங்கைப் புலி அதை; சேர்ந்து அணுகி பிடிக்கவும் முடியாமல்; பார்க்கும் அகலவும் விரும்பாமல் அதையே பார்க்கும்; திருமலையே திருமலை தான்; ஆயன் கண்ணபிரானின்; புன தன் நிலத்தில் வளர்ந்த; வேங்கை வேங்கைமரங்களின்; நாறும் மணம் கமழ; பொருப்பு பெற்ற மலை
thadāviya expansive; kŏdu peaks; uchchi vāy on top; agadu thĕyppa rubbing the lower part of the stomach; sārndhu approaching; ūrndhu iyangum moving slowly; veṇ madhiyin on the white coloured moon’s; oṇ muyalai beautiful rabbit; sinam vĕngai an angry tiger; sĕrndhu approaching; pārkkum will keep looking at the rabbit (without catching it or leaving it); thirumalaiyĕ only thirumalai; āyan kaṇṇapirān’s (krishṇa’s); punam vĕngai nāṛum with the sweet fragrance of vĕngai trees (a type of tropical tree) which grow well on its land; veṛpu mountain