(இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி நல்லார் நவில் குருகூரான் அன்றோ
இந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய