TVT 64

தலைவன் பெயர் கூறித் தரித்திருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல்

2541 இருக்கார்மொழியால் நெறியிழுக்காமை * உலகளந்த
திருத்தாளிணை நிலத்தேவர்வணங்குவர் * யாமுமவா
ஒருக்காவினையொடும்எம்மொடும் நொந்துகனியின்மையின்
கருக்காய்கடிப்பவர்போல் * திருநாமச்சொல்கற்றனமே.
2541 irukku ār mŏzhiyāl * nĕṟi izhukkāmai * ulaku al̤anta
tirut tāl̤ iṇai nilattevar vaṇaṅkuvar ** yāmum avā
ŏrukkā viṉaiyŏṭum ĕmmŏṭum nŏntu kaṉi iṉmaiyiṉ *
karukkāy kaṭippavar pol * tirunāmac cŏl kaṟṟaṉame64

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2541. She says “The Vediyars are like the gods in the sky as they worship him reciting the mantras of the Vedās. I blame myself for my bad karmā and try to join him. I have learned his divine names and recite them but I am like someone who bites into a bitter unripe fruit because he cannot get a ripe one. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருக்கு வேதங்களில் சொல்லப்பட்ட; ஆர் மொழியால் சிறந்த மந்திரங்களைக் கொண்டு; நெறி இழுக்காமை முறைமை தவறாமல்; உலகு உலகங்களை; அளந்த அளந்த பெருமானின்; திருத் தாள் இணை திருவடிகளை; வணங்குவர் வணங்குபவர்; நிலத்தேவர் நிலத்தேவர் எனப்படுவர்; யாமும் நாமும்; அவா ஒருக்கா ஆசையை அடக்கமாட்டாமல்; வினையொடும் பாபங்களையும்; எம்மொடும் எம்மையும்; நொந்து வெறுத்துக்கொண்டு; கனி இன்மையின் பழம் கிடைக்காதவர்; கருக்காய் பிஞ்சை; கடிப்பவர் போல் தின்பவர் போல; திரு நாம அவன் திருநாமங்களை; சொல் சொல்ல; கற்றனமே கற்றோம்
irukku being mentioned in rig vĕdham (one of the four parts of sacred texts); ār completely (explaining the true nature of supreme entity); mozhiyāl with purusha sūktham; neṛi the supreme path of worshipping supreme entity; izhukkāmai without mistake; nilaththĕvar ṣrīvaishṇavas, who are referred to as the dhĕvathās (celestial entities) of earth; ulagu world; al̤andha one which measured; thiruththāl̤iṇai divine feet; vaṇanguvar will worship [and attain]; yāmum we too; avā desire; orukkā not allowing to reach; vinaiyodum with sins; emmodum and with us; nondhu grieving; kani inmaiyil due to absence of fruit; karukkāy unripened fruit; kadippavar pŏl those who eat; thirunāmachchol divine names without following the meanings; kaṝanamĕ learnt