TVT 66

தலைவன் பாங்கனிடம் உற்றது உரைத்தல்: கழற்றெதிர் மறுத்தலுமாம்

2543 உண்ணாதுறங்காது உணர்வுறுமெத்தனை யோகியர்க்கும் *
எண்ணாய்மிளிருமியல்வினவாம் * எரிநீர்வளிவான்
மண்ணாகியவெம்பெருமான் தனது வைகுந்தமன்னாள்
கண்ணாய் அருவினையேன் * உயிராயினகாவிகளே.
2543 uṇṇātu uṟaṅkātu * uṇarvuṟum ĕttaṉai yokiyarkkum *
ĕṇ āy mil̤irum iyalviṉa ām ** ĕri nīr val̤i vāṉ
maṇ ākiya ĕm pĕrumāṉ taṉatu vaikuntam aṉṉāl̤ *
kaṇ āy aruviṉaiyeṉ * uyir āyiṉa kāvikal̤e66

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2543. He says, “O friend, She is divine like the Vaikuntam of our god who is fire, water, wind, sky and earth. Her eyes like kāvi flowers are my life. Like the yogis who do not eat, sleep or have feelings and put their minds only on god, my thoughts are only on her. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எரி நீர் வளி அக்னியும் ஜலமும் காற்றும்; வான் மண் ஆகாசமும் பூமியும்; ஆகிய ஆகியவற்றிற்கு அந்தராத்மாவாக இருக்கும்; எம் பெருமான் தனது எம்பெருமான் தன்; வைகுந்தம் வைகுண்டம் போன்ற இவளுடைய; கண்ஆய் கண்கள் என்ற பெயரையுடையனவாய்; அருவினையேன் கொடிய பாபத்தையுடைய எனக்கு; உயிர் ஆயின உயிராயிருக்கும்; காவிகளே செங்கழுநீர்ப் பூக்கள்; உண்ணாது உண்ணாமலும்; உறங்காது உறங்காமலும் இருந்து; உணர்வுறும் ஆத்ம ஞானத்தை அடைந்திருக்கிற; எத்தனை யோகியர்க்கும் பரம யோகிகளுக்கும்; எண்ஆய் நினைக்கத்தக்கவையாக; மிளிரும் பிரகாசிக்கும்; இயல்வின ஆம் இயல்பையுடையவைகளாக உள்ளன
eri for fire; nīr for water; val̤i for air; vān for sky; maṇ for earth; āgiya as indwelling soul; emperumān thanadhu for emperumān who is my benefactor, his wealth; vaigundham annāl̤ she, who is like ṣrīvaikuṇtam (having enjoyability); kaṇṇāy being called as eyes; aru cruel; vinaiyĕn ī, having sins; uyirāyina life-giving airs; kāvigal̤ red water lily; uṇṇadhu foregoing food; uṛangādhu foregoing sleep; uṇarvu knowledge (about true nature of āthmā); uṛum those who have attained; eththanai yŏgiyarkkum for even the distinguished people who carry out meditation; eṇṇāy to think about; mil̤irum being radiant; iyalvinavām they have that nature