Chapter 6

With longing, Āzhvār describes the greatness of the Lord (Thirukkātkarai ) - (உருகுமால் நெஞ்சம்)

ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)
Thirukkātkarai is one of the Malai Nādu divyadesams. Thirukkātkarai emperumān reminiscences melding with Āzhvār one day and how He somehow stabilized him from falling unconscious. Āzhvār sings about Thirukkātkarai emperumān in this Thiruvāymozhi.
மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருக்காட்கரை. ஒரு நாள் ஆழ்வாரோடு கலந்த கலவியை நினைவூட்டி ஒருவாறு தரித்து நிற்கச் செய்தவன் திருக்காட்கரை எம்பெருமான். ஆழ்வார் அவனைப் பற்றிக் கூறுகிறார் இத்திருவாய்மொழியில்.

ஒன்பதாம் பத்து -ஆறாம் திருவாய் மொழி -உருகுமால் -பிரவேசம் –

எழ நண்ணி நாமும் + Read more
Verses: 3728 to 3738
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will have no future births
  • TVM 9.6.1
    3728 ## உருகுமால் நெஞ்சம் * உயிரின் பரமன்றி *
    பெருகுமால் வேட்கையும் * என் செய்கேன் தொண்டனேன் **
    தெருவு எல்லாம் காவி கமழ் * திருக்காட்கரை *
    மருவிய மாயன் தன் * மாயம் நினைதொறே? (1)
  • TVM 9.6.2
    3729 நினைதொறும் சொல்லும்தொறும் * நெஞ்சு இடிந்து உகும் *
    வினைகொள் சீர் பாடிலும் * வேம் எனது ஆர் உயிர் **
    சுனைகொள் பூஞ்சோலைத் * தென் காட்கரை என் அப்பா
    நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)
  • TVM 9.6.3
    3730 நீர்மையால் நெஞ்சம் * வஞ்சித்துப் புகுந்து * என்னை
    ஈர்மைசெய்து * என் உயிர் ஆய் என் உயிர் உண்டான் **
    சீர் மல்கு சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
    கார் முகில் வண்ணன் தன் * கள்வம் அறிகிலேன் (3)
  • TVM 9.6.4
    3731 அறிகிலேன் தன்னுள் * அனைத்து உலகும் நிற்க *
    நெறிமையால் தானும் * அவற்றுள் நிற்கும் பிரான் **
    வெறி கமழ் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
    சிறிய என் ஆர் உயிர் உண்ட * திரு அருளே (4)
  • TVM 9.6.5
    3732 திரு அருள் செய்பவன் போல * என்னுள் புகுந்து *
    உருவமும் ஆர் உயிரும் * உடனே உண்டான் **
    திரு வளர் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
    கரு வளர் மேனி * என் கண்ணன் கள்வங்களே (5)
  • TVM 9.6.6
    3733 என் கண்ணன் கள்வம் * எனக்குச் செம்மாய் நிற்கும் *
    அம் கண்ணன் உண்ட * என் ஆர் உயிர்க் கோது இது **
    புன்கண்மை எய்திப் * புலம்பி இராப்பகல் *
    என் கண்ணன் என்று * அவன் காட்கரை ஏத்துமே (6)
  • TVM 9.6.7
    3734 காட்கரை ஏத்தும் * அதனுள் கண்ணா என்னும் *
    வேட்கை நோய் கூர * நினைந்து கரைந்து உகும் **
    ஆட்கொள்வான் ஒத்து * என் உயிர் உண்ட மாயனால் *
    கோள் குறைபட்டது * என் ஆர் உயிர் கோள் உண்டே (7)
  • TVM 9.6.8
    3735 கோள் உண்டான் அன்றி வந்து * என் உயிர் தான் உண்டான் *
    நாளும் நாள் வந்து * என்னை முற்றவும் தான் உண்டான் **
    காள நீர் மேகத் * தென் காட்கரை என் அப்பற்கு *
    ஆள் அன்றே பட்டது? * என் ஆர் உயிர் பட்டதே (8)
  • TVM 9.6.9
    3736 ஆர் உயிர் பட்டது * எனது உயிர் பட்டது *
    பேர் இதழ்த் தாமரைக் கண் * கனி வாயது ஓர் **
    கார் எழில் மேகத் * தென் காட்கரை கோயில் கொள்
    சீர் எழில் நால் தடம் தோள் * தெய்வவாரிக்கே? (9)
  • TVM 9.6.10
    3737 வாரிக்கொண்டு * உன்னை விழுங்குவன் காணில் என்று *
    ஆர்வு உற்ற என்னை ஒழிய * என்னில் முன்னம்
    பாரித்துத் ** தான் என்னை முற்றப் பருகினான் *
    கார் ஒக்கும் * காட்கரை அப்பன் கடியனே (10)
  • TVM 9.6.11
    3738 ## கடியனாய்க் கஞ்சனைக் * கொன்ற பிரான் தன்னை *
    கொடி மதிள் தென் குருகூர்ச் * சடகோபன் சொல் **
    வடிவு அமை ஆயிரத்து * இப் பத்தினால் சன்மம்
    முடிவு எய்தி * நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)