If One Thinks of the Lord of Tirukkāṭkarai, Desire Increases.
திருக்காட்கரையானை நினைத்தால் வேட்கை பெருகும்
3728 உருகுமால்நெஞ்சம் உயிரின்பரமன்றி *
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்? *
தெருவெல்லாம்காவிகமழ் திருக்காட்கரை *
மருவியமாயன்தன் மாயம்நினைதொறே. (2)