Chapter 5
Yearning to see her lover, Nāyaki expresses her crumpling sorrow up on seeing things that remind her of Him - (இன் உயிர்)
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்
A pirātti who conjugated with Bhagavān, wanted to drown her sorrows from being separated from Him by taking a walk in the garden. The cuckoo (kuyil) and the peacock in the garden reminded her of His talk and form. She thinks that these birds have been sent by Him to torture her and tells them, “Do you have to make such a great effort? I will take my + Read more
பகவானோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டி தன் ஆற்றாமையைத் தரித்துக்கொள்ள ஒரு பூஞ்சோலைக்குப் புறப்பட்டாள். அங்கிருந்த குயில், மயில், பகவானின் பேச்சையும், வடிவையும் நினைவூட்டின. எம்பெருமானால் ஏவப்பட்டே இவை தம்மைத் துன்புறுத்துகின்றன என்று எண்ணிய அப்பிராட்டி, “நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டுமோ? + Read more
Verses: 3717 to 3727
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will melt in devotion for the lord
- TVM 9.5.1
3717 ## இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு * இங்கு எத்தனை *
என் உயிர் நோவ மிழற்றேல்மின் * குயில் பேடைகாள் **
என் உயிர்க் கண்ண பிரானை * நீர் வரக் கூவுகிலீர் *
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் * இத்தனை வேண்டுமோ? (1) - TVM 9.5.2
3718 இத்தனை வேண்டுவது அன்று அந்தோ! * அன்றில் பேடைகாள் *
எத்தனை நீரும் நும் சேவலும் * கரைந்து ஏங்குதிர்? **
வித்தகன் கோவிந்தன் * மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் *
அத்தனை ஆம் இனி * என் உயிர் அவன் கையதே (2) - TVM 9.5.3
3719 அவன் கையதே எனது ஆர் உயிர் * அன்றில் பேடைகாள் *
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் * புடை சூழவே? **
தவம் செய்தில்லா * வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ *
எவன் சொல்லி நிற்றும் * நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3) - TVM 9.5.4
3720 கூக்குரல் கேட்டும் * நம் கண்ணன் மாயன் வெளிப்படான் *
மேல் கிளை கொள்ளேன்மின் * நீரும் சேவலும் கோழிகாள் **
வாக்கும் மனமும் * கருமமும் நமக்கு ஆங்கதே *
ஆக்கையும் ஆவியும் * அந்தரம் நின்று உழலுமே (4) - TVM 9.5.5
3721 அந்தரம் நின்று உழல்கின்ற * யானுடைப் பூவைகாள் *
நும் திறத்து ஏதும் இடை இல்லை * குழறேல்மினோ **
இந்திர ஞாலங்கள் காட்டி * இவ் ஏழ் உலகும் கொண்ட *
நம் திரு மார்பன் * நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5) - TVM 9.5.6
3722 நன்கு எண்ணி நான் வளர்த்த * சிறு கிளிப் பைதலே *
இன் குரல் நீ மிழற்றேல்! * என் ஆர் உயிர்க் காகுத்தன் **
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் * கண்ணன் கை காலினன் *
நின் பசும் சாம நிறத்தன் * கூட்டுண்டு நீங்கினான் (6) - TVM 9.5.7
3723 கூட்டுண்டு நீங்கிய * கோலத் தாமரைக் கண் செவ்வாய் *
வாட்டம் இல் என் கருமாணிக்கம் * கண்ணன் மாயன்போல் **
கோட்டிய வில்லொடு * மின்னும் மேகக் குழாங்கள்காள் *
காட்டேல்மின் நும் உரு * என் உயிர்க்கு அது காலனே (7) - TVM 9.5.8
3724 உயிர்க்கு அது காலன் என்று * உம்மை யான் இரந்தேற்கு * நீர்
குயில் பைதல்காள் * கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் **
தயிர்ப் பழஞ் சோற்றொடு * பால் அடிசிலும் தந்து * சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! * பண்பு உடையீரே (8) - TVM 9.5.9
3725 பண்பு உடை வண்டொடு தும்பிகாள் * பண் மிழற்றேல்மின் *
புண் புரை வேல் கொடு ** குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை * மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் * நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9) - TVM 9.5.10
3726 எழ நண்ணி நாமும் * நம் வான நாடனோடு ஒன்றினோம் *
பழன நல் நாரைக் குழாங்கள்காள் * பயின்று என் இனி? **
இழை நல்ல ஆக்கையும் * பையவே புயக்கு அற்றது *
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து * எங்கும் தழைக்கவே (10) - TVM 9.5.11
3727 ## இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த * பல் ஊழிக்கு *
தன் புகழ் ஏத்தத் * தனக்கு அருள் செய்த மாயனை **
தென் குருகூர்ச் சடகோபன் * சொல் ஆயிரத்துள் இவை *
ஒன்பதோடு ஒன்றுக்கும் * மூவுலகும் உருகுமே (11)