Chapter 2

Āzhvār prays that the Lord fulfills all that one’s kinsfolk are expected to do (Thiruppulingudi) - (பண்டை நாளாலே)

எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)
“emperumān encompasses all of one’s kith and kin and is even better than them since He intends to do good for us by staying at Thiruppulingudi divya desam. If we go there and approach Him, He will fulfill all that our kith and kin do for us”, so saying, Āzhvār reaches Him at Thiruppulingudi divya desam.
“எல்லா உறவு முறைகளையும் கொண்ட சிறந்த உறவினராக இருக்கும் எம்பெருமான் நமக்கு நன்மை செய்வதற்காகவே திருப்புளிங்குடி என்ற திவ்யதேசத்தில் திருக்கண் வளர்கிறான். நாம் அங்கு சென்று அவனை அணுகினால் நமக்கு உறவினர்கள் செய்யும் செயல்களை எல்லாம் செய்வான்” என்று கூறி ஆழ்வார் அங்கு சென்று அவனை அடைகிறார்.

ஒன்பதாம் + Read more
Verses: 3684 to 3694
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will attain the Lord's feet
  • TVM 9.2.1
    3684 ## பண்டை நாளாலே நின் திரு அருளும் *
    பங்கயத்தாள் திரு அருளும்
    கொண்டு * நின் கோயில் சீய்த்து பல்படிகால் *
    குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் **
    தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து * உன்
    தாமரைக் கண்களால் நோக்காய் *
    தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த *
    திருப்புளிங்குடிக் கிடந்தானே! (1)
  • TVM 9.2.2
    3685 குடிக்கிடந்து ஆக்கம் செய்து * நின் தீர்த்த
    அடிமைக் குற்றேவல்செய்து * உன் பொன்
    அடிக் கடவாதே வழி வருகின்ற *
    அடியரோர்க்கு அருளி ** நீ ஒருநாள்
    படிக்கு அளவாக நிமிர்த்த * நின் பாத
    பங்கயமே தலைக்கு அணியாய் *
    கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத் *
    திருப்புளிங்குடிக் கிடந்தானே (2)
  • TVM 9.2.3
    3686 கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
    கிடத்தி * உன் திருஉடம்பு அசைய *
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
    வழி வரும் * தொண்டரோர்க்கு அருளி **
    தடம் கொள் தாமரைக் கண் விழித்து *
    நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் *
    இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் *
    திருப்புளிங்குடிக் கிடந்தானே (3)
  • TVM 9.2.4
    3687 புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
    இருந்து * வைகுந்தத்துள் நின்று *
    தெளிந்த என் சிந்தையகம் கழியாதே *
    என்னை ஆள்வாய் எனக்கு அருளி **
    நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப *
    நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப *
    பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் * கனிவாய்
    சிவப்ப நீ காண வாராயே (4)
  • TVM 9.2.5
    3688 பவளம்போல் கனி வாய் சிவப்ப
    நீ காண வந்து * நின் பல் நிலா முத்தம் *
    தவழ் கதிர் முறுவல் செய்து * நின் திருக்கண்
    தாமரை தயங்க நின்றருளாய் **
    பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல் *
    தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் *
    கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் *
    காய் சினப் பறவை ஊர்ந்தானே (5)
  • TVM 9.2.6
    3689 காய் சினப் பறவை ஊர்ந்து * பொன் மலையின்
    மீமிசைக் கார் முகில் போல *
    மா சின மாலி மாலிமான் என்று * அங்கு
    அவர் படக் கனன்று முன் நின்ற **
    காய் சின வேந்தே கதிர் முடியானே *
    கலி வயல் திருப்புளிங்குடியாய் *
    காய் சின ஆழி சங்கு வாள் வில்
    தண்டு ஏந்தி * எம் இடர் கடிவானே (6)
  • TVM 9.2.7
    3690 எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே! *
    இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய் *
    செம் மடல் மலருந் தாமரைப் பழனத் *
    தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் **
    நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து *
    நாம் களித்து உளம் நலம் கூர *
    இம் மட உலகர் காண நீ ஒருநாள் *
    இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7)
  • TVM 9.2.8
    3691 எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் *
    இணை அடி தொழுது எழுது இறைஞ்சி *
    தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் *
    தலைத்தலைச் சிறந்து பூசிப்ப **
    திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் *
    திரு வைகுந்தத்துள்ளாய்! தேவா *
    இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் *
    இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8)
  • TVM 9.2.9
    3692 வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து *
    இதனுளும் இருந்திடாய் * அடியோம்
    போற்றி ஓவாதே கண் இணை குளிரப் *
    புது மலர் ஆகத்தைப் பருக **
    சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் *
    செழும் பனைத் திருப்புளிங்குடியாய் *
    கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த *
    கொடுவினைப் படைகள் வல்லானே (9)
  • TVM 9.2.10
    3693 கொடு வினைப் படைகள் வல்லையாய் * அமரர்க்கு
    இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் *
    கடு வினை நஞ்சே என்னுடை அமுதே *
    கலி வயல் திருப்புளிங்குடியாய் **
    வடிவு இணை இல்லா மலர்மகள் * மற்றை
    நிலமகள் பிடிக்கும் மெல் அடியை *
    கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் *
    கூவுதல் வருதல் செய்யாயே (10)
  • TVM 9.2.11
    3694 ## கூவுதல் வருதல் செய்திடாய் என்று *
    குரை கடல் கடைந்தவன் தன்னை *
    மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் *
    வழுதி நாடன் சடகோபன் **
    நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் *
    இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் *
    ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் *
    அடி இணை உள்ளத்து ஓர்வாரே (11)