O Nectar! Come for at Least One Day So I May Grasp Your Holy Feet.
அமுதே! நின் திருவடியை நான் பிடிக்க ஒரு நாளாவது வா
3693 கொடுவினைப்படைகள்வல்லையாய்
அமரர்க்கிடர்கெடஅசுரர்கட்கிடர்செய் *
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்! *
வடிவிணையில்லாமலர்மகள் மற்றை
நிலமகள்பிடிக்கும்மெல்லடியை *
கொடுவினையேனும்பிடிக்கநீயொருநாள்
கூவுதல்வருதல்செய்யாயே.