Those Who Recite These Verses Will Become Excellent Devotees.
இவற்றைப் படித்தோர் சிறந்த பக்தர்களாவர்
3694 கூவுதல்வருதல்செய்திடாயென்று
குரைகடல்கடைந்தவன்தன்னை *
மேவிநன்கமர்ந்தவியன்புனல்பொருநல்
வழுதிநாடன்சடகோபன் *
நாவியல்பாடலாயிரத்துள்ளும்
இவையுமோர்பத்தும்வல்லார்கள் *
ஓவுதலின்றியுலகம்மூன்றளந்தான்
அடியிணையுள்ளத்தோர்வாரே. (2)