TVM 9.2.3

O Reclining Lord! Arise and Be Seated.

பள்ளிகொண்டானே! எழுந்து அமர்க

3686 கிடந்தநாள்கிடந்தாய்எத்தனைகாலம்

கிடத்தி? உன்திருவுடம்பசைய *

தொடர்ந்துகுற்றவேல்செய்து தொல்லடிமை

வழிவரும்தொண்டரோர்க்கருளி *

தடங்கொள்தாமரைக்கண்விழித்து

நீயெழுந்துஉன்தாமரைமங்கையும்நீயும் *

இடங்கொள்மூவுலகும்தொழவிருந்தருளாய்

திருபுளிங்குடிக்கிடந்தானே!

Text size