O Lord! Remain Before Our Eyes for One Day.
பெருமானே! எம் கண்முன் ஒரு நாள் இருந்திடு
3690 எம்மிடர்கடிந்திங்கென்னையாள்வானே!
இமையவர்தமக்குமாங்கனையாய்! *
செம்மடல்மலரும்தாமரைப்பழனத்
தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்! *
நம்முடையடியர்கவ்வைகண்டுகந்து
நாம்களித்துளநலங்கூர *
இம்மடவுலகர்காணநீயொருநாள்
இருந்திடாய்எங்கள்கண்முகப்பே.