O Lord of Puḷiyaṅkuṭi! Remove Our Afflictions.
புளியங்குடியாய்! எம் இடங்களை அகற்று
3689 காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார்முகில்போல *
மாசினமாலிமாலிமானென்று
அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற *
காய்சினவேந்தே! கதிர்முடியானே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்! *
காய்சினவாழிசங்குவாள்வில்
தண்டேந்தி எம்மிடர்கடிவானே. (2)