O Lord of Puḷiṅkuṭi! Place Your Holy Feet upon My Head.
புளிங்குடியானே! நின் திருவடிகளை என் தலையில் வை
3685 குடிகிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்த
அடிமைக்குற்றேவல்செய்து * உன்பொன்
அடிக்கடவாதேவழிவருகின்ற
அடியரோர்க்கருளி * நீயொருநாள்
படிக்களவாகநிமிர்த்த நின்பாத
பங்கயமேதலைக்கணியாய் *
கொடிக்கொள்பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்
திருபுளிங்குடிக்கிடந்தானே!