Chapter 1

Āzhvār realizes Emperumān capitulates to His devotees - (தேவிமார் ஆவார்)

எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்
Bhagavān, along with His consorts, wished to hear Thiruvāymozhi while residing at Thiruvāranvilai. Āzhvār, not only desired to sing the divine hymns but also wished to perform many kainkaryams there. But, his wish did not transpire.

Filled with uncertainty, Āzhvār inquires, “PerumānE! You capitulate to your devotees! You are Almighty (Sarvasakthan)! + Read more
பகவான் பிராட்டியரோடு இருந்துகொண்டு திருவாறன்விளையில் திருவாய்மொழி கேட்க விரும்புகிறான். அங்குச் சென்று திருவாய்மொழி பாடுவதோடு மற்றும் பல கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று ஆழ்வார் பாரித்தார். ஆனால், அது நடைபெறவில்லை.

"பெருமானே! நீ அடியார்களுக்கு வசப்பட்டவன்! ஸர்வசக்தன்! எல்லா + Read more
Verses: 3563 to 3573
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will be saved
  • TVM 8.1.1
    3563 ## தேவிமார் ஆவார் திருமகள் பூமி *
    ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் *
    மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி *
    வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் **
    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
    கண்ணது ஓர் * பவள வாய் மணியே *
    ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
    அப்பனே * காணுமாறு அருளாய் (1)
  • TVM 8.1.2
    3564 காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் *
    கண்ண நீர் அலமர * வினையேன்
    பேணுமாறு எல்லாம் பேணி *
    நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ **
    காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா *
    தொண்டனேன் கற்பகக் கனியே *
    பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் *
    பெரு நிலம் எடுத்த பேராளா (2)
  • TVM 8.1.3
    3565 எடுத்த பேராளன் நந்தகோபன் தன் *
    இன் உயிர்ச் சிறுவனே * அசோதைக்கு
    அடுத்த பேரின்பக் குல இளம் களிறே *
    அடியனேன் பெரிய அம்மானே **
    கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் *
    கைஉகிர் ஆண்ட எம் கடலே *
    அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் *
    எங்ஙனம் தேறுவர் உமரே? (3)
  • TVM 8.1.4
    3566 உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
    ஆகி * உன் தனக்கு அன்பர் ஆனார் *
    அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை *
    அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
    அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் *
    அடு படை அவித்த அம்மானே *
    அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே *
    என்னுடை ஆர் உயிரேயோ (4)
  • TVM 8.1.5
    3567 ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் *
    படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த *
    பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து * அங்கு
    உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த **
    சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
    போலத் * தேவர்க்கும் தேவாவோ *
    ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்! *
    உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)
  • TVM 8.1.6
    3568 எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே? *
    ஏழ் உலகங்களும் நீயே *
    அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே *
    அவற்று அவை கருமமும் நீயே **
    பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் *
    அவையுமோ நீ இன்னே ஆனால் *
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே *
    வான் புலன் இறந்ததும் நீயே (6)
  • TVM 8.1.7
    3569 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே *
    நிகழ்வதோ நீ இன்னே ஆனால் *
    சிறந்த நின் தன்மை அது இது உது என்று *
    அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
    கறந்த பால் நெய்யே! நெய்யின் இன் சுவையே! *
    கடலினுள் அமுதமே * அமுதில்
    பிறந்த இன் சுவையே! சுவையது பயனே! *
    பின்னை தோள் மணந்த பேர் ஆயா! (7)
  • TVM 8.1.8
    3570 மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் *
    வல்வினையேனை ஈர்கின்ற *
    குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
    கூற்றமே * கொடிய புள் உயர்த்தாய் **
    பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
    பள்ளியாய் * பாற்கடல் சேர்ப்பா *
    வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் *
    செய்கையும் யானும் நீ தானே (8)
  • TVM 8.1.9
    3571 யானும் நீ தானே ஆவதோ மெய்யே *
    அரு நரகு அவையும் நீ ஆனால் *
    வான் உயர் இன்பம் எய்தில் என்? * மற்றை
    நரகமே எய்தில் என்? * எனிலும் **
    யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
    அஞ்சுவன் * நரகம் நான் அடைதல் *
    வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்! *
    அருளு நின் தாள்களை எனக்கே (9)
  • TVM 8.1.10
    3572 தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
    தந்த * பேர் உதவிக் கைம்மாறா *
    தோள்களை ஆரத் தழுவி என் உயிரை *
    அற விலை செய்தனன் சோதீ
    தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய் **
    துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் *
    தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் *
    தமியனேன் பெரிய அப்பனே (10)
  • TVM 8.1.11
    3573 ## பெரிய அப்பனை பிரமன் அப்பனை *
    உருத்திரன் அப்பனை * முனிவர்க்கு
    உரிய அப்பனை அமரர் அப்பனை *
    உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை **
    பெரிய வண் குருகூர் வண் சடகோபன் *
    பேணின ஆயிரத்துள்ளும் *
    உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் *
    உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)