Chapter 10

Āzhvār requests the Lord in Thiruvāranvilai to accept him as His servant - (இன்பம் பயக்க)

திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)
Bhagavān decrees, “Āzhvār! I have showered my blessings on you, so don’t falter now. I, along with my consorts, reside in Thiruvāranvilai divyadesam. Come there! I want to hear your divine hymns. Do come and sing for me and find some solace there.“ Āzhvār obeys His command as expressed in these hymns.
“ஆழ்வீர்! என் அருளைக் கொண்டு நீர் தடுமாற்றம் அடையவேண்டாம். திருவாறன்விளை என்ற திவ்யதேசத்தில் நான் (உபய) நாச்சிமார்களோடு இருந்துகொண்டு, உமது வாயினால் பாடும் திருவாய்மொழியைக் கேட்க விரும்புகிறேன். அங்கு வந்து திருவாய்மொழி பாடி ஒருவாறு சமாதானம் அடையும்” என்றான் பகவான் அவ்வாறே ஆழ்வார் + Read more
Verses: 3552 to 3562
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழம்பஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: Gods will worship them
  • TVM 7.10.1
    3552 ## இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் * தானும்
    இவ் ஏழ் உலகை *
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து *
    ஆள்கின்ற எங்கள் பிரான் **
    அன்புற்று அமர்ந்து உறைகின்ற * அணி பொழில்
    சூழ் திருவாறன்விளை *
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து * கைதொழும்
    நாள்களும் ஆகும்கொலோ? (1)
  • TVM 7.10.2
    3553 ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? * அகல் இடம்
    முற்றவும் ஈர் அடியே *
    ஆகும்பரிசு நிமிர்ந்த * திருக்குறள் அப்பன்
    அமர்ந்து உறையும் **
    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு *
    மதிள் திருவாறன்விளை *
    மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து *
    கைதொழக் கூடும்கொலோ? (2)
  • TVM 7.10.3
    3554 கூடும் கொல் வைகலும்? * கோவிந்தனை
    மதுசூதனைக் கோளரியை *
    ஆடும் பறவைமிசைக் கண்டு * கைதொழுது
    அன்றி அவன் உறையும் **
    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி * ஐந்து
    ஆறு அங்கம் பன்னினர் வாழ் *
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ *
    வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)
  • TVM 7.10.4
    3555 வாய்க்கும்கொல் நிச்சலும் * எப்பொழுதும் மனத்து
    ஈங்கு நினைக்கப்பெற *
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் *
    வயல் சூழ் திருவாறன்விளை **
    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன் *
    வடமதுரைப் பிறந்த *
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் *
    மலர் அடிப்போதுகளே? (4)
  • TVM 7.10.5
    3556 மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் *
    இருத்தி வணங்க
    பலர் அடியார் முன்பு அருளிய * பாம்பு அணை அப்பன்
    அமர்ந்து உறையும் **
    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு *
    மதிள் திருவாறன்விளை *
    உலகம் மலி புகழ் பாட * நம்மேல் வினை
    ஒன்றும் நில்லா கெடுமே. (5)
  • TVM 7.10.6
    3557 ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் * தீவினை உள்ளித்
    தொழுமின் தொண்டீர்! *
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை *
    அணி நெடும் தோள் புணர்ந்தான் **
    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப *
    உள்ளே இருக்கின்ற பிரான் *
    நின்ற அணி திருவாறன்விளை என்னும் *
    நீள் நகரம் அதுவே (6)
  • TVM 7.10.7
    3558 நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் *
    சூழ் திருவாறன்விளை *
    நீள் நகரத்து உறைகின்ற பிரான் * நெடுமால்
    கண்ணன் விண்ணவர் கோன் **
    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய *
    வெம் போர்கள் செய்து *
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான் * சரண்
    அன்றி மற்று ஒன்று இலமே (7)
  • TVM 7.10.8
    3559 அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று *
    அகல் இரும் பொய்கையின்வாய் *
    நின்று தன் நீள் கழல் ஏத்திய * ஆனையின்
    நெஞ்சு இடர் தீர்த்த பிரான் **
    சென்று அங்கு இனிது உறைகின்ற * செழும் பொழில்
    சூழ் திருவாறன்விளை *
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? * தீவினை
    உள்ளத்தின் சார்வு அல்லவே (8)
  • TVM 7.10.9
    3560 தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகித் *
    தெளி விசும்பு ஏறலுற்றால் *
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் * அமைந்த
    தொழிலினுள்ளும் நவின்று **
    யாவரும் வந்து வணங்கும் பொழில் *
    திருவாறன்விளை அதனை *
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்? *
    என்னும் என் சிந்தனையே (9)
  • TVM 7.10.10
    3561 சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை *
    தேவ பிரான் அறியும் *
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன *
    மாயங்கள் ஒன்றும் இல்லை **
    சிந்தையினால் சொல்லினால் செய்கையால் * நிலத்தேவர்
    குழு வணங்கும் *
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை *
    தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)
  • TVM 7.10.11
    3562 ## தீர்த்தனுக்கு அற்றபின் * மற்று ஓர் சரண் *
    இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
    தீர்த்த மனத்தனன் ஆகிச் * செழுங்
    குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    தீர்த்தங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும்
    வல்லார்களை * தேவர் வைகல்
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
    உரைப்பர் * தம் தேவியர்க்கே (11)