One Must Worship Tiruvāṟaṉviḷai Daily.
நாள்தோறும் திருவாறன்விளையைத் தொழவேண்டும்
3554 கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனைமதுசூதனைக் கோளரியை *
ஆடும்பறவைமிசைக்கண்டு கைதொழுதன்றி யவனுறையும் *
பாடும்பெரும்புகழ்நான்மறைவேள்வியைந்து ஆறங்கம் பன்னினர்வாழ் *
நீடுபொழில்திருவாறன்விளைதொழ வாய்க்குங்கொல்? நிச்சலுமே.