There is No Refuge Other Than the Feet of the Lord of Tiruviṇṇakar.
திருவிண்ணகரன் பாதமல்லால் சரணில்லை
3371 பரஞ்சுடருடம்பாய் அழுக்குப்பதித்தவுடம்பாய் *
கரந்தும்தோன்றியும்நின்றும் கைதவங்கள்செய்தும் * விண்ணோர்
சிரங்களால்வணங்கும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
வரங்கொள்பாதமல்லாலில்லை யாவர்க்கும்வன்சரணே.